"வந்தது ஒரே ஒரு தலைவலிதான்!".. "என்னால நம்பவே முடியல!".. மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தலைவலி  வந்ததால் பெண் ஒருவர் கோடீஸ்வரியாக மாறியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

"வந்தது ஒரே ஒரு தலைவலிதான்!".. "என்னால நம்பவே முடியல!".. மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட்!

விர்ஜினியாவைச் சேர்ந்த Olgha ritchie என்பவருக்கு தலைவலி உண்டானதை அடுத்து அங்குள்ள கடைத்தெருப் பகுதிக்கு சென்று மருந்தகத்தில் மருந்து வாங்கியுள்ளார். அப்போதுதான் அங்கு விற்கப்பட்ட Mega Money சுரண்டல் லாட்டரி சீட்டுகளையும் சேர்த்து வாங்கிக் கொண்டார்.

இதில் அவரே எதிர்பாராத விதமாக 5 லட்சம் டாலர்  பரிசாக விழுந்திருக்கிறது. இதுபற்றி பேசிய Olgha தன்னால் தன் கண்களையே நம்ப முடியவில்லை என்றும், தனக்கு தலைவலி என்பதால் மருந்து கடைக்குச் சென்றதாகவும் அதனால்தான் தனக்கு இந்த பணம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பரிசில் வீட்டை புதுப்பிக்க உள்ளதாகவும், மீதி பணத்தை சேமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்