'200 கோடி சொத்து, மனைவியுடன் 38 வருட வாழ்க்கை'... 'உறவை முறித்த இந்தியாவின் பணக்கார வழக்கறிஞர்'... லண்டனில் நடந்த மறுமணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும், பெரும் கோடீஸ்வரருமான ஹரீஷ் சால்வே தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்துள்ளார்.

'200 கோடி சொத்து, மனைவியுடன் 38 வருட வாழ்க்கை'... 'உறவை முறித்த இந்தியாவின் பணக்கார வழக்கறிஞர்'... லண்டனில் நடந்த மறுமணம்!

இந்தியாவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக 1999ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார். பின்னர் லண்டனுக்கு அழைக்கப்பட்ட ஹரீஷ் சால்வே, அங்கு குயின்ஸ் கவுன்சிலில் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த வழக்கறிஞராகப் பார்க்கப்படும் ஹரீஷ் சால்வே, அம்பானி, டாடா, மிட்டல் போன்ற பெரும் பணக்காரர்களுக்காகப் பல வழக்குகளில் வாதாடியுள்ளார். கோடீஸ்வர வழக்கறிஞராக இருந்தாலும் சால்வேவை பொருத்த வரை ஒரு பொருட்டாக எண்ணியதே இல்லை. அதே நேரத்தில் வழக்கு வழக்குச் சவாலானதாக இருக்க வேண்டும் என எண்ணும் சால்வே, ஒருவார் குற்றமற்றவர் அப்பாவி என்று நம்பினால் அவர்களுக்காக இலவசமாகவும் வாதிடுவார்.

Harish Salve marries London-based artist Caroline Brossard

இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு ஹரிஸ் சால்வ் வாதாடினார். அதேபோன்று உப்பார் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் வாதாடியுள்ளார்.

Harish Salve marries London-based artist Caroline Brossard

இந்நிலையில் 38 வருடங்களாக வாழ்ந்து வந்த மனைவி மீனாட்சியைக் கடந்த ஜூன் மாதம் ஹரீஷ் விவாகரத்து செய்தார். பின்னர் Caroline Brossard என்ற 56 வயது பெண்ணை லண்டனில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அரசு விதிப்படி 15 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஹரீஷ் சால்வே மீனாட்சி தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதே போன்று Caroline Brossardயின் முதல் கணவர் மூலம் அவருக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார்.

மற்ற செய்திகள்