“மன்னிச்சிருங்க.. ஆனா இத சொல்லிதான் ஆகணும்!”..“உலகை உறைய வைத்த வீடியோ”.. கனத்த இதயத்துடன் இணையவாசிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் பற்றி எரிந்து, கிடுகிடுவென எங்கும் பரவிய காட்டுத் தீயால் அரை பில்லியன் உயிரினங்கள் உடல் கருகி இறந்துள்ள சம்பவம் உலகையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

“மன்னிச்சிருங்க.. ஆனா இத சொல்லிதான் ஆகணும்!”..“உலகை உறைய வைத்த வீடியோ”.. கனத்த இதயத்துடன் இணையவாசிகள்!

நீருக்கு பதில் யூகலிப்ட்ஸ் இலையில் இருந்து நீர்ச்சத்தினை எடுத்துக்கொள்ளும் கோலா கரடி உள்ளிட்ட தனித்துவமான விலங்கினங்களின் ஆகாரமாக 

இருந்த அந்த இலைகளும் கருகின. மேலும் கங்காரு, கோலா கரடி, ஈமு பறவைகள், காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் சின்னஞ்சிறிய உயிரினங்கள் என பல வகையான உயிரினங்கள் கருகியுள்ளன.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் பாட்லோவ் காட்டுப்பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 

அப்பகுதியையும் நகரத்தையும் இணைக்கும் சாலை வழியே சென்ற பத்திரிகையாளர் ஒருவர், காட்டுத் தீயுடன் சாலை வரை நகர்ந்து வந்து உடல் கருகி உயிரிழந்து சாலையிலேயே பரிதாபமாகக் கிடக்கும் கங்காரு, கோலா கரடி, செம்மறி ஆடுகள் உள்ளிட்டவற்றின் வீடியோவை பகிர்ந்து, ‘இதைப் பகிர்வதற்கு மன்னிக்கவும், ஆனால் இதயத்தை நொறுக்கும் விதமாக இருக்கும் இந்த காட்சிகளை உலகறியச் செய்ய வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் உலகையே உறையவைத்துள்ளன.

AUSTRALIAFIRES, PRAYFORAUSTRALIA