'அமெரிக்காவில் படிச்சவங்களுக்கு அடித்தது ஜாக்பாட்'... 'H -1B விசாவில் வந்த அதிரடி மாற்றம்'... யாருக்கு லாபம்?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், எச் 1 பி விசாவில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ள நிலையில், அங்குப் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனால் அதிபர் டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நிலைமை கட்டுக்குள் வந்த பிறகும் வேலைவாய்ப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று கருதப்படும் நிலையில், அனைத்திலும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என டிரம்ப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் எச் 1 பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையிலும் மேலவையிலும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவிலேயே கல்வி பயின்ற வெளிநாட்டவருக்கு, எச் 1 பி விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவில் கல்வி பயிலும் சிறந்த திறன் வாய்ந்த மாணவர்களுக்கு அதிக ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க இந்த மசோதா வழிவகை செய்யும். ஆனால் அமெரிக்கப் பணியாளர்களுக்குப் பதில் அந்த இடத்தில் எச் 1 பி விசா பெற்ற வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதையும், தடுக்க வகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்




