உலகின் மிக வயதான மனிதர் மரணம்! அந்த காலத்துல ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸையே அடிச்சு ஓட விட்ருக்காரு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்பெயின்: உலகின் மிக வயதான மனிதரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிக வயதான மனிதர் மரணம்! அந்த காலத்துல ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸையே அடிச்சு ஓட விட்ருக்காரு

மனிதனின் ஆயுள்காலம்:

முன்காலத்தில் உடல் ஆரோக்கியம் இருந்தாலும் ஏதேனும் கொடிய வைரஸ் தாக்கி வெகு சீக்கிரம் மரணம் அடைவர். அதிலும் பிறந்த குழந்தைகளில் உயிர் பிழைத்து இருப்பதே மிகவும் அரிதாக இருந்தது. மருத்துவ புரட்சியினால் மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துள்ளது. ஆனால் முன்பு போல் மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறானா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏராளமான நோய்கள் பெருகி விட்டது. அதுவும் கொரோனா என்ற கொடிய வைரஸ் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக இறந்துள்ளனர்.

Guinness World Record holder for oldest man has died

உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிப்பு:

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள லியோன் நகரைச் சேர்ந்தவர் சாடர்னினோ டிலா ப்யூன்டே. இவர் கடந்த 1909-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி பிறந்தார். இவர் தான் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

Guinness World Record holder for oldest man has died

ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற பெருந்தொற்று பரவியபோது தப்பிப்பு:

இந்நிலையில் 112 -வது வயதான சாடர்னினோ டிலா ப்யூன்டே நேற்று முன்தினம் காலமானார். இதற்கு முன் கடந்த 1918-ல் ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற பெருந்தொற்று பரவியபோது அதிலிருந்து உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.

எட்டு குழந்தைகள் பிறந்தனர்:

சாடர்னினோ டிலா தனது 13-வது வயதில் காலணிதொழிற்சாலை ஒன்றில் பணியாற்றத் தொடங்கிய ப்யூன்டே பிறகு சொந்தமாக காலணி வியாபாரத்தில் ஈடுபட்டார். இவருக்கு ப்யூன்டே மற்றும் இவரது மனைவி அன்டோனியாவுக்கு 8 குழந்தைகள் பிறந்தனர்.

Guinness World Record holder for oldest man has died

14 பேரக்குழந்தைகள் மற்றும் 22 கொள்ளு பேரக் குழந்தைகள்:

அதோடு தற்போது அவருக்கு 14 பேரக்குழந்தைகள் மற்றும் 22 கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் லியோன் நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமான நிலையில் அவரது உடல் உள்ளூர் கல்லறையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

GUINNESS, OLDEST MAN, DIED, கின்னஸ், வயதான மனிதன்

மற்ற செய்திகள்