உலகத்தின் மிக உயரமான பூனை.. கின்னஸ் நிர்வாகம் கொடுத்த அங்கீகாரம்.. இதுல இப்படியும் ஒரு சிக்கல் இருக்கா.. சோகத்தில் உரிமையாளர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வளர்க்கப்படும் பூனை ஒன்று உலகின் மிக உயரமான வீட்டுப்பூனை என கின்னஸ் நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
Also Read | நெனச்சதை சாதிச்ச எலான் மஸ்க்.. முடிவிற்கு வரும் நீண்டநாள் போராட்டம்.. முழு விபரம்..!
பூனைகள் வளர்ப்பது பலருக்கும் பிடித்துப்போய்விடுகிறது. இன்று மட்டுமல்ல, பழங்காலத்திலேயே மக்கள் பூனைகளை வளர்த்திருப்பதற்கான சான்றுகள் நிறையவே இருக்கின்றன. உரிமையாளர்களை சுற்றிச்சுற்றி சேட்டைகள் செய்யும் பூனைகளின் வீடியோக்களால் சோசியல் மீடியாக்கள் நிரம்பி வழிகின்றன. அந்த அளவு மக்களிடையே பூனை மீதான காதல் வளர்ந்துவருகிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் வளர்ந்துவரும் வித்தியாசமான பூனையை கண்டு அக்கம்பக்கத்தினர் அரண்டு போயிருக்கிறார்கள்.
Fenrir
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் டாக்டர் வில்லியம் ஜான். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்துவருகிறார். அதற்கு Fenrir எனப் பெயர்சூட்டியுள்ள அவர் சில தினங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பிரபலமானார். அதற்கு காரணம் அவருடைய பூனை தான். Fenrir தான் தற்போதைய நிலையில் உலகின் மிகவும் உயரமான வீட்டு பூனை என கின்னஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் உயரம் 47.83 செமீ (18.83 அங்குலம்) ஆகும். சராசரி பூனைகளை காட்டிலும் Fenrir இரண்டு மடங்கு உயரம் கொண்டது.
உயரம்
சர்வதேச பூனை சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட F2 சவன்னா பூனை இனத்திலிருந்து ஃபென்ரிர் தோன்றியதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இது வீட்டுப் பூனைக்கும் ஆப்பிரிக்கன் செர்வல் எனப்படும் காட்டுப் பூனைக்கும் பிறந்த கலப்பின குட்டியாகும். இதுகுறித்து கின்னஸ் அமைப்பின் இணையதளத்தில்,"ஒரு காட்டுப் பூனையின் வழித்தோன்றலாக இருந்தாலும், ஃபென்ரிர் தனது இனத்திற்கு விதிவிலக்கான உயரத்தை கொண்டிருக்கிறது. சராசரி அளவிலான சவன்னா பூனைகளை விட ஒரு அங்குலம் உயரமாக இருக்கிறது இந்தப்பூனை. இது பொதுவாக 14 முதல் 17 அங்குல உயரம் வரை இருக்கும். ஆனால் Fenrir 18.8 அங்குலம் உயரம் வளர்ந்திருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பூனை பிறந்து 12 வாரத்தில் ஜான் அதை பெற்றிருக்கிறார். முதன்முதலில் இந்த பூனையை பார்ப்பவர்கள் இதனை சிறுத்தை என நினைத்து அச்சம் கொள்கிறார்கள் எனவும் அது சங்கடத்தை அளித்தாலும் தனக்கு இந்தப்பூனை மிகவும் விருப்பத்திற்குரியது எனத் தெரிவித்திருக்கிறார் ஜான்.
மற்ற செய்திகள்