'அந்த' ஒரு நாட்டுக்கு போறதுக்கு மட்டும்... எந்த தடுப்பூசினாலும் 'ஓகே' தான்...! - கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தங்கள் நாட்டில் அனுமதி என ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளது.

'அந்த' ஒரு நாட்டுக்கு போறதுக்கு மட்டும்... எந்த தடுப்பூசினாலும் 'ஓகே' தான்...! - கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...!

இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்புமருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி போட்ட மக்களுக்கு, பல வெளிநாடுகள் பயணத்தின் போது சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட மக்கள் அந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியதில்லை.

இந்நிலையில் ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும், சுவிட்சர்லாந்திலும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியவை கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்களுக்கு பயணத்திற்கான ஒப்புதல் அளித்துள்ளன.

மேலும், எஸ்டோனியா நாட்டிற்குச் செல்பவர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், மத்திய அரசு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம், இந்திய அரசினால் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரித்து தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்தது.

அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தடுப்பூசி போட்டவர்களை தனிமைப்படுத்தல் இன்றி உள்ளே அனுமதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் -டிஜிட்டல் கோவிட் சான்றிதழ் என்ற ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகரித்த தடுப்பூசிகளும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மற்ற செய்திகள்