"நிலநடுக்கம் மாதிரி இருந்துச்சு".. நேருக்கு நேர் மோதிய ரயில்கள்.. 36 பேர் மரணம்.. பெரும் சோகம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கிரீஸ் நாட்டில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 36 பேர் மரணமடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நிலநடுக்கம் மாதிரி இருந்துச்சு".. நேருக்கு நேர் மோதிய ரயில்கள்.. 36 பேர் மரணம்.. பெரும் சோகம்..

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | உலகின் ரொம்ப பாதுகாப்பான Vault.. மொத்த மக்களையும் காப்பாத்த ஐநா போட்ட பிளான்.. பிரம்மிக்க வைக்கும் பின்னணி..!

கிரீஸ் நாட்டின் வட திசையில் உள்ள தெஸ்ஸலே மாகாணத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலும் எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்றும் நேருக்கு மோதின. இதில், 36 பேர் மரணமடைந்திருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 85 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கின்றனர். ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் உள்ளே சிக்கியவர்களை பெரும் முயற்சியின் பலனாக வீரர்கள் மீட்டனர். இந்த கோர விபத்தில் தப்பியவர்கள் இதுபற்றி பேசுகையில் விபத்து நேர்ந்த போது நிலநடுக்கம் போல இருந்ததாகவும் சிலர் மோதலின் காரணமாக ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

Greek Train Crash At least 36 dead and 85 injured in fiery

Images are subject to © copyright to their respective owners.

இந்த சம்பவத்தை முதலில் பார்த்தவர்களில் ஒருவரான வசிலிஸ் பாலிஜோஸ் இதுபற்றி பேசுகையில்,"புகைகளுக்கு மத்தியில் நிறைய இரும்பு துண்டுகள் சிதறி கிடந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் வலியாலும், அச்சத்தாலும் சத்தம் எழுப்பினர். இதனால் அப்பகுதியே அசாதாரணமாக இருந்தது. உடனடியாக அங்கிருந்த சிலர் மீட்புப் படைக்கு தகவல் கொடுத்தோம்" என்றார்.

மாகாண ஆளுநர் அகோரஸ்டோஸ் கூறுகையில், "ரயிலில் 350 பேர் பயணித்தனர். விபத்தில் 32 பேர் பலியாகினர். 85க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 250 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது" என்றார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஜெயிலில் இருந்து தப்பித்த மாஃபியா தலைவன்.. பெட்ஷீட்டை வச்சு போட்ட பலே ப்ளான்.. .. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!

GREEK, TRAIN CRASH, GREEK TRAIN CRASH

மற்ற செய்திகள்