Jo Mersa Marley: பாப் மார்லியின் பேரனும் புகழ்பெற்ற பாடகருமான ஜோ மெர்சா மார்லி மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புகழ்பெற்ற பாடகரும் பாப் மார்லியின் பேரனுமான ஜோ மெர்சா மார்லி மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Jo Mersa Marley: பாப் மார்லியின் பேரனும் புகழ்பெற்ற பாடகருமான ஜோ மெர்சா மார்லி மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Also Read | 12 வருஷம் முன்னாடி மாயமான மகன்.. இறந்து போயிருப்பான்னு நெனச்ச தாய்க்கு.. இத்தனை நாள் கழிச்சு வந்த போன் கால்!!

கரீபியன் கடலில் அமைந்துள்ள ஜமைக்கா நாடு இசைக்கும் புகழ்பெற்றது. இங்கு பிறந்த பாப் மார்லி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை குறுகிய காலத்திற்குள் தனது குரலால் தன்பக்கம் கவர்ந்திழுத்தவர். அந்த வகையில் அவரது பேரன் ஜோ மெர்சா என்பவரும் இசையுலகில் அவருக்கு வாரிசாக கருதப்பட்டவர்.

கடந்த 1991 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் பிறந்தவர் ஜோ மெர்சா. ஜோ மெர்சா மார்லி 2010 இல் "மை கேர்ள்" (My Girl) மூலம் அறிமுகமானார். அந்த ஆல்பத்தில் அவர் தனது உறவினர் டேனியல் பம்பாட்டா மார்லியுடன் இணைந்து அவர் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் "பேட் சோ" (Bad So)-வை வெளியிட்டார். பின்னர் இது அவரது  'கம்ஃபர்டபிள்' என்ற ஆல்பத்திலும் இடம்பெற்றிருந்தது.

Greatest singer Bob Marley grandson Jo Mersa Marley dies at 31

ஜோ மெர்சா மார்லி தனது முதல் தனி ஆல்பமான 'எடர்னல்' ஐ 2021 இல் வெளியிட்டார். கலைத்துறையில் தனது சொந்த முயற்சியில் அங்கீகாரம் பெற முயற்சித்து வருவதாக அவர் பல இடங்களில் பேசியிருந்தார். புகழ்பெற்ற இதழான ரோலிங் ஸ்டோன்-க்கு அவர் அளித்த பேட்டியில்,"நான் மார்லியின் புதிய தலைமுறையில் ஒருவன். அதே நேரத்தில் புதிய பரிசோதனைகளை செய்து வருகிறேன். எனது பாரம்பரிய பின்புலத்தை மையமாகக்கொண்டு புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதே எனது திட்டம்" எனத் தெரிவித்திருந்தார்.

Greatest singer Bob Marley grandson Jo Mersa Marley dies at 31

இந்நிலையில், அவர் மரணமடைந்திருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்கிறார். தற்போது அவருக்கு வயது 31 ஆகும். இருப்பினும் மரணத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஜோ மெர்சா மார்லியின் மரணம் உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக ஜோ மெர்சா மார்லியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Also Read | மாமல்லபுரத்தை குடும்பத்தினருடன் சுற்றிப்பார்த்த கூகுள் CEO சுந்தர் பிச்சை.. வைரல் போட்டோஸ்..!

SINGER, SINGER BOB MARLEY, SINGER BOB MARLEY GRANDSON, SINGER BOB MARLEY GRANDSON JO MERSA MARLEY, JO MERSA MARLEY PASSED AWAY

மற்ற செய்திகள்