இந்திய மதிப்பில் சுமார் '75 ஆயிரம்' ரூபாய்... பிரபல நிறுவனத்தின் தரமான 'சர்ப்ரைஸ்'... இனிமே 'Work From home' ஹேப்பி அண்ணாச்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊரடங்கின் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்த படியே பணிபுரிய வலியுறுத்தியுள்ள நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு தளர்வின் காரணமாக பல நிறுவனங்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளன.

இதனையடுத்து, உலகின் பிரபல நிறுவனமான கூகுள், ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் தங்களது அலுவலகங்களை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக பல ஊழியர்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு வரை வீட்டில் இருந்த படியே வேலை செய்யவும் அறிவுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தலா ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் ரூபாய்) வழங்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பர்னிச்சர் மற்றும் இதர உபகரணங்கள் வாங்கிக் கொள்வதற்கு வேண்டி இந்த தொகையை நிறுவனம் அளிப்பதாக அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 10 சதவீத ஊழியர்களுடன் அலுவலகம் செயல்படவுள்ளது. சமூக இடைவெளி உட்பட அனைத்து நடவடிக்கைகளும் கடுமையாக மேற்கொள்ளப்படும் எனவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதனையடுத்து செப்டம்பர் மாதத்திற்கு பிறகு 30 சதவீத ஊழியர்களுடன் அலுவலகம் செயல்படும் என்றும் மற்ற ஊழியர்கள் இந்தாண்டு இறுதி வரை வீட்டிலிருந்தே தங்களது பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
'தண்ணி அடிக்க தண்ணிக்குள் நீச்சல்...' 'சாராயத்துக்காக மதுப்பிரியர்கள்...' எடுக்கும் ஹெவி ரிஸ்க்... !




