Sundar Pichai : “தீபாவளி வாழ்த்துக்கள்”.. கூகுள் CEO சுந்தர் பிச்சை போட்ட படுவைரல் ட்வீட்..
முகப்பு > செய்திகள் > உலகம்கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர்தான் சுந்தர் பிச்சை.
கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர். பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை இந்தியாவில் சாதிக்கதுடிக்கும் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்குகிறார்.
இந்நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு தம் வாழ்த்து பதிவை பகிர்ந்து இருக்கிறார். அவருடைய இந்த வாழ்த்து செய்தி ட்விட்டரில் பதிவிடப்பட்டதை அடுத்து உலக அளவிலான இந்தியர்களின் மத்தியில் இந்த வாழ்த்து செய்தி வைரல் ஆகி வருகிறது.
இது தொடர்பான தம்முடைய வாழ்த்து செய்தியில் சுந்தர் பிச்சை போட்ட ட்வீட்டில், “தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. அனைவரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தீபாவளி நேரத்தை செலவிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்!” என்று பதிவிட்டு இருக்கிறார்.
இதேபோல் சுந்தர் பிச்சைக்கும் முக்கிய பிரமுகர்கள், இணையவாசிகள் என எண்ணற்ற பலரும் தங்களுடைய வாழ்த்துச் செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்