கூகுள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உங்க பார்ட்னரோட நேரம் செலவு பண்ணுங்க.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஊழியர்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் 20 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள்:
கொரோனா பரவி வந்த சூழலில் பல உலக நாடுகள் பொருளாதார அளவில் பெரும் சறுக்கலை சந்தித்தது. மேலும் பலமுன்னணி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததோடு சம்பளத்தையும் குறைத்து வந்தது. சில நிறுவனங்கள் சம்பளத்தை பாதியாக குறைத்தன. இதனால் ஊழியர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினார்கள்.
கூகுள் நிறுவனம் அறிவித்த சலுகைகள்:
மேலும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களில் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வருகின்றனர். முதல் இரண்டு அலைகளில் வீடுகளில் பணி புரிய சொன்னாலும் அதற்கு பின்னர் அலுவலகங்களுக்கு வர கூறினார்கள். தற்போது மீண்டும் மூன்றாவது அலை பரவி வருவதால் பெரும்பான்மையான தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் வீடுகளில் இருந்து பணிபுரிய கூறியுள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் கொரோனா காலத்திலும் தங்களது ஊழியர்களுக்கு பல சலுகைகளை கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதற்கு முன் விடுமுறைச் சலுகை, ஊக்கத்தொகை போன்ற சில சலுகைகளும் ஊழியர்களுக்குக் கிடைக்கிறது.
வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு:
இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஊழியர்களுக்கான ஊதிய விடுப்பு தினங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இந்த புதிய அறிவிப்பின்படி இனி ஊழியர்கள் ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 20 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிட விடுமுறை நாட்கள் உபயோகப்படும்:
அதுமட்டுமில்லாமல் தங்களது ஊழியர்கள் குழந்தை பிறந்தவுடன் அதைக் கவனித்துக்கொள்ளவும், வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிடம் மற்ற தேவைகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் உதவும் என கூகுள் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான ஃபியோனா கிகோனி தெரிவித்துள்ளார்.
மேலும், புதிதாகக் குழந்தை பிறந்த பெற்றோர்களுக்கான 18 நாள் விடுமுறை 24 நாட்கள் வரை அதிகரித்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்