ஒண்ணும் செய்யாத ஹேக்கருக்கு 2 கோடி ரூபாய் அனுப்பிய 'கூகுள்' நிறுவனம்.. "கடைசி'ல வெச்சாரு பாருங்க செம ட்விஸ்ட்"!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எந்த வேலையும் செய்யாத ஹேக்கர் ஒருவருக்கு 'Google' நிறுவனம் 2 கோடி ரூபாய் பணம் அனுப்பி உள்ள நிலையில், இதற்கு பின்னால் உள்ள காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

ஒண்ணும் செய்யாத ஹேக்கருக்கு 2 கோடி ரூபாய் அனுப்பிய 'கூகுள்' நிறுவனம்.. "கடைசி'ல வெச்சாரு பாருங்க செம ட்விஸ்ட்"!!

பொதுவாக சாப்ட்வேர்களில் ஏதாவது பிழைகள் இருக்கும் போது அதனை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு கூகுள் உள்ளிட்ட பல பெரும் நிறுவனங்கள் சன்மானம் வழங்கும் விஷயம் என்பது வழக்கமான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில், எந்த பிழைகளையும் கண்டுபிடிக்காத சைபர் செக்யூரிட்டி பொறியாளர் ஒருவருக்கு சுமார் 2,50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) வழங்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

இது தொடர்பாக ஹேக்கரும், சைபர் செக்யூரிட்டி நிபுணருமான சாம் கர்ரி என்ற நபர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கூகுள் நிறுவனம் தனக்கு சுமார் 2,49,999 டாலர்களை மூன்று வாரங்களுக்கு முன்பு அனுப்பியதாகவும், ஆனால் எதற்காக என் வங்கிக் கணக்கிற்கு அவர்கள் பணம் அனுப்பினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Google mistakenly sends 2 crore rupees to hacker

இது பற்றி தொடர்பு கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி கூகுள் நிறுவனத்தையும் அவர் டேக் செய்திருந்தார். இத்துடன் கூகுளில் இருந்து பெறப்பட்ட பணம் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டையும் சாம் பகிர்ந்திருந்தார்.

ஏதாவது பிழைகளை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு பரிசளிப்பது என்பது வாடிக்கையாக இருக்கும் நிலையில் எதுவுமே செய்யாத ஹேக்கர் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஊழியருக்கு இத்தனை டாலர்களை கூகுள் நிறுவனம் அனுப்பியதால் இணையவாசிகள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

Google mistakenly sends 2 crore rupees to hacker

அப்படி இருக்கையில் தான் பணம் எப்படி சாம் கர்ரி வங்கி கணக்கிற்கு சென்றது என்பது பற்றி Google நிறுவனம் சார்பில் விளக்கம் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிகாரி ஒருவரின் தவறு காரணமாக தவறுதலாக பணம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் எங்கள் கவனத்திற்கு இதை கொண்டு வந்ததற்கு நன்றி என்றும் இதனை சரி செய்ய என்ன வழி என்பதை பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. முன்னணி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு பொறியாளராக இருக்கும் சாம் கர்ரி, கூகுள் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்களுக்கு பக் ஃபிக்சிங் செய்து அதற்கான வெகுமதியை பலமுறை வென்றிருக்கிறார்.

அப்படி இருக்கையில் எந்த பிழையும் தான் கண்டுபிடிக்காத போது 2 கோடி ரூபாயை கூகுளில் வழங்கப்பட்ட நிலையிலும், அதிலிருந்து ஒரு காசை கூட அவர் செலவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

GOOGLE, HACKER

மற்ற செய்திகள்