கருக்கலைப்புத் தடை உத்தரவு..! "உங்கள் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும்.!" - பெண் ஊழியர்களுக்காக கூகுள் அதிரடி..
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில், பெண் ஊழியர்கள் கருக்கலைப்பு செய்ய விருப்பினால் எந்த காரணமும் முறையாக தெரிவிக்காமலேயே, அவர்கள் தங்களது பணியிடத்தை மாற்றிக்கொள்வதற்கு கோரலாம் என்று அதிரடியாக சொல்லியிருக்கிறது கூகுள்.
Also Read | தங்க செயினை திருடும் எறும்புகள்.. "இவங்க மேல எப்படி கேஸ் போடுறது?".. IFS அதிகாரி பகிர்ந்த வீடியோ..!
அமெரிக்காவில், பெண்கள் விருப்பத்தின் பேரில் கருக்கலைப்பு மேற்கொள்ளலாம் என்று கடந்த 1973-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, இதன் மூலம் அரசின் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் படி பெண்களுக்கு விருப்பத்தின் பேரில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.
எனினும் கடந்த ஜூன் 24-ஆம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் இதை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு சட்டமாக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனால் இந்த தீர்ப்புக்கு பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்த தீர்ப்பானது பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளதாக கூறி, பெண்கள் அமைப்பினர் பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தான் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்கள் பலவும் பெண் ஊழியர்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பும்போது அவர்கள், வேறு நாடுகளுக்கு அவர்கள் தங்களது பணியிடத்தை மாற்றிக்கொள்ளலாம் என்றும் புதிய சலுகைகளை அறிவித்துள்ளன.
குறிப்பாக அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும், தங்கள் நிறுவன பெண் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், கருக்கலைப்பு செய்வதற்கான தடை உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்கள் மத்தியில் இந்த உத்தரவு ஏற்படுத்திய ஆழமான பாதிப்பு சொல்லி மாளாதது.
நாங்கள் பெண்கள் இருவருக்கும் சம உரிமை வழங்குகிறோம். அத்துடன் அவர்களின் எதிர்கால வாழ்வு, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் அக்கறை கொண்டு, எங்களது அமெரிக்க பெண் ஊழியர்கள் கருக்கலைப்பு செய்ய விரும்பினால் எவ்வித காரணமும் இன்றி தங்களது பணியிடத்தை மாற்றிக்கொள்ள கோரிக்கை வைத்து விண்ணப்பிக்கலாம் என்றும், அந்த விண்ணப்பம் உடனடியாக பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Also Read | வாட்சப் செயலியில் பெண்களுக்கான புதிய வசதி.. மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் பீரியட் டிராக்கர்..!
மற்ற செய்திகள்