அதிர்ச்சி! ஒரு பவுன் தங்கம் ரூ.1.5 லட்சம்.. Russia – Ukrine War-ன் தாக்கமா? எங்க தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில் கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்து வருகிறது.  இந்நிலையில்,இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1.5 லட்சமாக அதிகரித்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதிர்ச்சி! ஒரு பவுன் தங்கம் ரூ.1.5 லட்சம்.. Russia – Ukrine War-ன் தாக்கமா? எங்க தெரியுமா?

குளத்துக்குள் பதுங்கி இருந்த ரவுடி.. பறந்து வந்த ‘ட்ரோன்’ கேமரா.. சினிமாவை விஞ்சும் சேஸிங்..!

ரஷ்யா - உக்ரைன் போர்

சமகால சரித்திரத்தில் மிக மோசமான தாக்குதலை உக்ரைன் தேசம் சந்தித்து வருகிறது. நேட்டோ அமைப்புடன் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்துவந்த நிலையில், இதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார்.

வீழ்ந்த பங்குச் சந்தை

ரஷ்யாவின் போர் அறிவிப்பு காரணமாக உலகளாவிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அதேபோல, கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிரிப்டோ கரன்சி மார்க்கெட்டும் சரிவை சந்தித்த காரணத்தினால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தில் பணத்தை முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இவற்றின் தாக்கம் தங்கம் விலையில் பிரதிபலித்து இருக்கிறது.

Gold rate hit all time high in Sri Lanka Russia Ukraine crisis

சவரன் 1.5 லட்ச ரூபாய்

பொருளாதர ரீதியாக பல சிக்கல்களை சமீப காலங்களில் சந்தித்துவரும் இலங்கையில் ஒரு சவரன் தங்கம் 1.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு 1.5 லட்ச ரூபாய்க்கும் 22 கேரட் தங்கம் சவரன் 1.39 லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவில் நிலை என்ன?

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4831.00 என்று விற்பனை ஆகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 31 ரூபாய் குறைந்து ரூபாய் 4792.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38648.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 312 குறைந்து ரூபாய் 38336.00 என விற்பனையாகி வருகிறது.

Gold rate hit all time high in Sri Lanka Russia Ukraine crisis

சென்னையில் நேற்று வெள்ளியின் விலை ரூ. 72.80 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 72.30 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 72300.00 என விற்பனையாகி வருகிறது.

எலான் மஸ்க்-கு மெசேஜ் அனுப்பிய இந்திய மாணவர்.. 2 நிமிடத்தில் வந்த ரிப்ளை..என்ன சொல்லிருக்காரு பாருங்க..!

GOLD RATE, SRI LANKA, RUSSIA UKRAINE CRISIS

மற்ற செய்திகள்