சோபாவுக்கு பின்னாடி கிடைச்ச 50 வருட பழைய ‘லெட்டர்’.. படிச்சு பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த தம்பதி..!
முகப்பு > செய்திகள் > உலகம்பழைய சோபா ஒன்றை சரிசெய்யும் போது கிடைத்த கடிதத்தை படித்துப் பார்த்து தம்பதியினர் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதிய தம்பதியான பீட்டர்-ரோஸ் பெக்கெர்டன், பழைய சோபா ஒன்றை சரிசெய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது சோபாவின் பின்புறம் பழைய கடிதம் ஒன்று பீட்டரின் கண்ணில் தென்பட்டுள்ளது. உடனே அதை தனது மனை ரோஸிடம் கொடுத்துள்ளார். பின்னர் அதை படித்துப் பார்த்ததும் இருவரும் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.
1969ம் ஆண்டு பிப்ரவரி 23 என குறிப்பிட்டுள்ள அந்த கடிதத்தில், 11 வயது சிறுமி வருங்காலம் எப்படி இருக்கும் என தனது பள்ளி ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் பசை போன்ற உணவைதான் (பீட்சா) அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது ரீசிவர் உள்ள டெலிபோன் தான் உள்ளது.
ஆனால் வரும் காலத்தில் திரையுடன் கூடிய தொலைபேசி வந்துவிடும். தொலைக்காட்சியில் மனிதர்கள் தெரிவதுபோல, தொலைபேசி வாயிலாக (Video Call) மனிதர்கள் பேசிக்கொள்வார்கள்’ என அச்சிறுமி எழுதியுள்ளார். அதில் உள்ள சின்ன சின்ன பிழைகளை திருத்தி ஆசிரியர் சிகப்பு பேனாவால் எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பே தற்போது உள்ள தொழில்நுட்பம் குறித்து 11 வயது சிறுமி எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்