‘கொரோனாவுக்கு எதிராகப் போராடும் தாய்’... 'ஒரு மாதம் கழித்து’... ‘தற்செயலாக பார்த்த மகள்’... ‘அழுதுக் கொண்டே நடத்திய பாசப் போராட்டம்’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பணி காரணமாக தாயை ஒரு மாதமாக பார்க்காத நிலையில், திடீரென பார்த்ததால் 6 வயது சிறுமி தாயை கட்டிக்கொண்டு அழுத சம்பவம் கண்ணீர்விட வைத்துள்ளது.
துருக்கியில் காரமான் நகரில் ஓஜே கோக் என்ற இளம்பெண் (Ozge Kocak) மருத்துவமனை ஒன்றில் மருத்துவ செயலராக பணிபுரிந்து வருகிறார். அந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதால் ஓஜே கோக் ஒரு மாதமாக வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் இவரது 6 வயது மகள், தந்தை மற்றும் தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
இதனால் தாயில்லாமல் தவித்த மகளை, வீடியோ கால் மூலம் பேசி வந்தநிலையில், சில வாரங்களாக அதையும் பணி சுமை காரணமாக நிறுத்திவிட்டார். இந்நிலையில் மகள், அம்மா ஏன் வீட்டுக்கு வருவதில்லை என்று தந்தையிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதற்கிடையில் வீட்டுக்கு செல்வதை முன்னிட்டு கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்திக்கொண்ட மனைவி ஓஜேவே, மருத்துவமனையில் இருந்து கணவர் வந்து காரில் அழைத்துவந்துள்ளார்.
அப்போது வீட்டுக்கு போகும்வழியில் நண்பர்களுடன் சாலையில், சைக்கிள் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகளை திடீரென தாய் ஓஜே கூப்பிட்டதும், செய்வதறியாது தவித்த மகள் தாயை கட்டிப்பிடித்துக்கொண்ட கதறி அழுத காட்சி அனைவரையும் கண்ணீர் விட வைத்துள்ளது.