Video : 'டிக் டாக்' எடுத்துக் கொண்டிருந்த 'இளம்பெண்'... 'வீடியோ' முடியுறதுக்குள்ள காத்திருந்த 'அதிர்ச்சி'!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் டிக் டாக் செய்து கொண்டிருந்த போது, தனக்கு நேர்ந்த ஒரு காரியத்தால் அவர் மட்டும் அதிர்ச்சியில் உறைந்து போகாமல் அந்த வீடியோ காண்பவர்களையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள மரைன் ஷார்ட் என்ற இளம்பெண் ஒருவர் காரில் வைத்து கூல் டிரிங்க்ஸ் ஒன்றை குடிப்பதை டிக் டாக் வீடியோவில் பதிவு செய்துள்ளார். அப்போது, அதில் வெண்ணிலா, க்ரீம் வகைகள், கேரமல் போன்ற பொருட்கள் இருந்ததால் அந்த பானம் மிகவும் சுவையாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், அதனை குடித்த போது அவற்றில் சுவையில்லை என்பதை உணர்ந்து மரைன் அதிர்ச்சியில் உறைந்தார்.
'ஏன் என்னால் சுவையை உணர முடியவில்லை. எனக்கு கொரோனா தொற்று உள்ளதா?' என அந்த வீடியோவில் அதிர்ச்சியில் கேட்கிறார். 'ஒரு நிமிடம். என்னால் இதனை உணர்ந்து கொள்ள முடியவில்லை' என கூறிக் கொண்டே வீடியோவை நிறுத்திய நிலையில், மரைனின் இந்த வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.
அதன் பின்னர் மரைன் தனக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து பார்த்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தற்போது, மரைன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்டுகளை குறிப்பிட்டு வருகின்றனர்.
This is best horror film of 2020. pic.twitter.com/y2tRzb1IZU
— Paul Price (@priceliketag) December 5, 2020
மற்ற செய்திகள்