‘22 வயது பெண் செய்த காரியம்!’... இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டதும்’.. உடனே ட்ரேஸ் செய்து ‘நேரில்’ வந்த போலீஸ்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட பெண் ஒருவரை போலிசார் அதிரடியாக பிடித்துள்ளனர். 

‘22 வயது பெண் செய்த காரியம்!’... இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டதும்’.. உடனே ட்ரேஸ் செய்து ‘நேரில்’ வந்த போலீஸ்!

சேனல் தீவுகளில் ஒன்றான ஜெர்சி தீவைச் சேர்ந்த Carys Ann Ingram என்கிற 22 வயதான பெண் மான்செஸ்டரில் கல்வி பெற்று வந்துள்ளார். இவர் மான்செஸ்டரில் இருந்து ஜெர்சி தீவுக்கு பயணம் செய்துள்ளார். ஆனால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக ஹோட்டல் ஒன்றுக்கு சென்றதுடன் நண்பர் ஒருவரின் வீட்டிற்கும் சென்றதோடு ஷாப்பிங் மாலுக்கும் சென்றுள்ளார்.

இதனிடையே இவர் பயணித்த விமானத்தில் இவருடைய அருகில் அமர்ந்து இருந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததை அடுத்து, Carys Ann Ingram-ஐ தொடர்பு கொண்ட அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு எச்சரித்தனர். 8 நாளுக்குப்பின் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.

girl 22, caught to police after post pic in Instagram here is why

ஆனால் அதன்பின் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாததால் அதிகாரிகள் அவரை தேடி வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் வீட்டிலும் இல்லை. இந்த நிலையில்தான் அவர் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றது, ஹோட்டலில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பின் தெரிய வந்தது.

அந்த புகைப்படத்தை வைத்து அவரை ட்ரேஸ் செய்த அதிகாரிகள் அவர் இருக்கும் இடத்தை விரைந்து சென்று அடைந்து சுய தனிமைப்படுத்துதல் விதிகளை மீறியதற்காக அவருக்கு 6,600 பவுண்டுகள் அபராதம் விதித்தனர். அந்த தொகையை கட்டவில்லை என்றால் அவர் 24 வாரங்கள் சிறை செல்ல நேரிடும் என்றும் அறிவுறுத்தினர்.

மற்ற செய்திகள்