'கிறிஸ்துமஸ் அன்று மாயமான இளம் பெண்!'.. அதற்கு முன் பேஸ்புக்கில் பகிர்ந்த ‘வைரல்’ புகைப்படம்!.. ‘கூடவே பகிர்ந்த’ முக்கியமான கேப்ஷன்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆண் ஒருவருடன் மாயமான பிரிட்டன் இளம்பெண் தொடர்பில் அவருடைய பெற்றோர் பொதுமக்களின் உதவியை கேட்டுள்ளனர்.

'கிறிஸ்துமஸ் அன்று மாயமான இளம் பெண்!'.. அதற்கு முன் பேஸ்புக்கில் பகிர்ந்த ‘வைரல்’ புகைப்படம்!.. ‘கூடவே பகிர்ந்த’ முக்கியமான கேப்ஷன்!

பிரிட்டனின் East Yorkshire, Hull நகரில் கடந்த டிசம்பர் 25 ஆம் ஆண்டு கடைசியாக 19 வயதான Chloe Fewster என்கிற பெண் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்று கூறப்பட்டதை அடுத்து அவரை தேடும் பணி தீவிரமானது. இன்னொருபுறம் அதே சம்பவத்தன்று ஆண் நண்பர் ஒருவருடன் தான் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அந்தப் பெண். அதன் பின்னர்தான் அந்த பெண் மாயமாகியுள்ளார்.

அந்தப் பெண்ணுடன் இருக்கும் அந்த ஆண் நபர் யார் என்று கேள்வி குறியாகவே இருக்கிறது என்றாலும், அந்த நண்பர் அவருடைய காதலராக இருக்கலாம் என்று சிலர் கூறி வரும் நிலையில் , குறிப்பிட்ட அந்த குடும்பத்தினர் தங்கள் பெண் மாயமானதற்கு அந்த நபர் தான் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். எனினும் இந்த விவகாரம் தொடர்பில் போலீஸார் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் உறுதி செய்யப்படவில்லை. 

இதுபற்றி பேசிய அப்பெண்ணின் தாயார் தாம் எப்போது தொடர்பு கொண்டாலும் தம் மகள் தமக்கு ரெஸ்பான்ஸ் செய்வார் என்று குறிப்பிட்டதோடு, ஆனால் அந்த ஆண் நண்பர் தான் அவர் மாயமானதற்கு காரணமாக இருக்க வாய்ப்புண்டு என்றும் கூறியிருக்கிறார். அத்துடன் அந்த நபரால் ஏமார்ந்து விடாதே என்று கண்ணீருடன் ஒரு அறிவுரையும் சேர்த்து சொல்லியுள்ளார்.

இது தொடர்பாக தம் மகளுக்கு நெருக்கமான தோழிகள் அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிய வந்தால் தம்மிடமா அல்லது போலீசாரிடமோ தயவு செய்து பகிர வேண்டும் என்கிற கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளார்.

மற்ற செய்திகள்