'உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் நிலையில்'.. ஜெர்மனியில் மட்டும் ‘இப்படி ஒரு மரபுவழி சிகிச்சையா?’.. ஆச்சரிய தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுகான் நகரில் உருவாகி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் ஓய்ந்தபாடில்லை.

'உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் நிலையில்'.. ஜெர்மனியில் மட்டும் ‘இப்படி ஒரு மரபுவழி சிகிச்சையா?’.. ஆச்சரிய தகவல்!

இந்த வைரசுக்கு எதிராக தொடக்கத்தில் அனைவரும் சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றத் தொடங்கினர். இதில் பல முன்னணி நாடுகள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனையை முதன்முதலில் உருவாக்கினர். அப்படி சோதனை செய்யத் தொடங்கிய நாடுகளில் முதன்மையான நாடு ஜெர்மனி. எந்த ஜெர்மனியில் இப்படி கொரோனா கண்டறியும் சோதனை தொடக்கத்தில் உருவாக்கப்பட்டதோ, எந்த ஜெர்மனியில் முதல் தடுப்பூசியை உருவாகியதோ அங்கு வேறு ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆம் ஜெர்மனியில் விண்கல்லையும், இஞ்சியையும் பயன்படுத்தி கொரோனாவுக்கான சிகிச்சை ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. பலநாடுகளில் அல்லோபதி தவிர்த்து இயற்கை வைத்தியம் முதலானவை பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இப்படியான வைத்தியம் பிரபலம் தான். அப்படித்தான் ஜெர்மனியிலும் ஒரு சிகிச்சை பயன்பாட்டில் இருக்கிறது.

1861 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் Rudolf Steiner . இவருடைய கொள்கைகளை பயன்படுத்தும் மருத்துவமனைகள் இன்னும் ஜெர்மனியில் எஞ்சியுள்ளன. இந்த மருத்துவமனைகள் Steiner மருத்துவமனைகள் என்று அழைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இஞ்சி தாவரத்தின் வேரை பொடி செய்து பயன்படுத்துவது தான் இந்த முறை. இந்த மருத்துவ முறையின் படி இஞ்சி தாவரத்தின் வேரை பொடி செய்து அதை பயன்படுத்தி நெஞ்சில் பற்றுப் போடுவார்கள். அத்துடன் கடுகு பொடி அல்லது என்கிற Yarrow செடியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேயிலை சேர்க்கப்படும்.

இவற்றுடன் வீரியமிக்க பாஸ்பரஸ் மற்றும் விண்கல்லில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு உள்ளிட்டவற்றையும் ஹோமியோபதி முறையில் மாத்திரைகளாக்கி கொடுக்கும் முறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்தியா வரை பல நாடுகளும் கொரோனா தடுப்பூசியை சோதனை முறையில் போடத் தொடங்கினர்.

ஆனாலும் கொரோனாவுக்கு இந்த தடுப்பூசிகள் பலன் தருமா என்பது பேச்சுவார்த்தை அளவில்தான் இருக்கிறது. எனினும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அனைவரும் கொரோனா தடுப்பூசியை வரவேற்றுள்ளனர்.  அத்துடன் தடுப்பூசி தொடர்பாக பிரபல சுகாதார அமைப்புகள் செய்த ஆய்வின் அடிப்படையில் அளித்த தரச்சான்றிதழ் இந்த தடுப்பூசியை ஏற்பதற்கு மக்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நம்பிக்கையூட்டின.

இந்தியாவைப் பொருத்தவரை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்தநிலையில் ஜெர்மனில் இவ்வாறு விண்கல்லையும் இஞ்சியையும் பயன்படுத்தி செய்யப்படும் இந்த சிகிச்சை முறை பலன் அளிக்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால் இந்த மருத்துவம் பலனளிக்கிறதா என்பதற்கான அறிவியல் பூர்வ மற்றும் ஆய்வு பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதேசமயம் ஆய்வு செய்வதற்கு நேரமில்லை என்னும் நிலைமையும் நீடிக்கிறது. இதனிடையே இந்த இஞ்சி மற்றும் விண்கல் மருத்துவம் நோயாளிகளுக்கு நன்மை செய்வது தெரிய வந்திருக்கிறது.

ALSO READ: “ரொம்ப தேவைதான்.. நாடே கொரோனாவுல இருக்குறப்ப.. இப்படியா செய்வீங்க?”.. ஜனாதிபதியையும், அவரது மனைவியையும் கரித்துக் கொட்டும் மக்கள்.. காரணம் இதுதான்!

ஒருபக்கம் ஜெர்மனியில் இந்த சிகிச்சைக்கு எதிர்ப்பு இருக்கிறது. இன்னொரு பக்கம் உறுதியான ஆதரவும் உருவாகி வருகிறது .1830களில் ஜெர்மனியில் காலரா நோய் பரவியபோது ஹோமியோபதி சிகிச்சை முறை ஜெர்மனியில் உருவானதாக மருத்துவ வரலாற்றாளர் Robert Jutte கூறுகிறார். வரலாற்றில் எப்போதெல்லாம் அல்லோபதி மருத்துவம் கையறுநிலையில் தவித்ததோ, அப்போதெல்லாம் இப்படியான மாற்று சிகிச்சைகள் மேலெழும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்