மேலே சட்டை, கீழே ‘பெண்களின்’ ஸ்கர்ட், ஹீல்ஸ்.. தினமும் இதே மாதிரி ஆபீஸ் போகும் ‘இன்ஜினீயர்’.. இதுக்கு அவர் சொன்ன ‘அசத்தல்’ பதில்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண்களின் ஸ்கர்ட் மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு வலம் வரும் ஜெர்மனி நபர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் மார்க் பிரியன். இவர் பொறியாளர், கால்பந்து பயிற்சியாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். தற்போது மனைவி மற்றும் மகளுடன் ஜெர்மனியில் வசித்து வரும் இவர், சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது முதல்முறையாக ஸ்கர்ட் (Skirt) மற்றும் ஹை ஹீல்ஸ் (High heels) அணிந்துள்ளார். அப்போது அவரை ஏராளமானோர் கிண்டல் செய்துள்ளனர். ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. தனக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்ய தயங்கக் கூடாது, ஆடைகளை பொறுத்தவரை ஆண், பெண் என்ற வேறுபாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலே ஆண்கள் அணியும் சட்டை, கீழே பெண்கள் அணியுன் ஸ்கர்ட் மற்றும் ஹை ஹீல்ஸ் அணிவதுதான் இவரது ஸ்டைல். உடை விஷயத்தில் மனைவியும், மகளும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். என்ன உடை அணிய வேண்டும், எப்படி அணிய வேண்டும் என குடும்பத்தினர் அறிவுரை கூறுவதாக மார்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என நினைத்த அவர், அதற்கு சமூக வலைதளங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறார். இதில் ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். ஒரு சிலர் மோசமாக விமர்சனம் செய்தாலும், பெரும்பாலானோர் தன்னை பாராட்டுவது பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக பெண்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு வந்துள்ளதாக மார்க் தெரிவித்துள்ளார். பாலினத்திற்கும், உடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நமக்கு பிடித்த உடைகளை அணிவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது என்பதை புரிய வைக்கவே இந்த முயற்சியை மேற்கொள்வதாக மார்க் பிரியன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்