விசாரணைக்காக போன போலீஸ் அதிகாரிகள்... போன எடத்துல 'நடந்த' செயலால்... 'லீவ்' எடுத்துச் சென்ற 'மூன்று' போலீசார்... ஜெர்மனியை அதிர வைத்த 'கொடூரம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜெர்மனி நாட்டின் ஜார்ஜ் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நிலையில், அங்குள்ள காட்சிகளை கண்டு சகிக்க முடியாமல் போலீசார் மூன்று பேர் விடுப்பு எடுத்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன அந்த வீட்டிற்குள் இருந்தது?

விசாரணைக்காக போன போலீஸ் அதிகாரிகள்... போன எடத்துல 'நடந்த' செயலால்... 'லீவ்' எடுத்துச் சென்ற 'மூன்று' போலீசார்... ஜெர்மனியை அதிர வைத்த 'கொடூரம்'!!!

ஜெர்மனியில் குழந்தைகள் மீதான வன்முறை நடைபெறுவது தொடர்பாக மிகப்பெரிய நெட்ஒர்க் ஒன்று செயல்படுவதாக புகார் கிடைத்த நிலையில் அது தொடர்பாக விசாரிக்க ஜார்ஜ் என்பவரது வீட்டில் சோதனை நடத்த வேண்டி போலீசார் அங்கு சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர், அந்த வீட்டில் உள்ளவர்கள் அமைதியானவர்கள் என தெரிவித்த நிலையில், ஜார்ஜ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்ட போலீசார் திகைத்து போயினர்.

43 வயதான ஜார்ஜ் வீட்டில், மூன்று மாத குழந்தை முதல் மொத்தம் ஐம்பது குழந்தைகள் வரை அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இதில் தனது மூன்று மாத குழந்தை உட்பட அனைவரிடமும் தவறாக நடந்து கொண்டு அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து குரூப் சாட்களில் பகிர்ந்துளான் அந்த கயவன். அனைத்து சாட் குரூப்களிலும் மொத்தம் 1800 வரை இருந்துள்ளனர். ஜார்ஜுடன் இணைந்து மொத்தம் 87 பேர் இந்த மோசமான நெட்ஒர்க்கில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மன் வரலாற்றின் மிகப்பெரிய கொடுஞ்செயலாக இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த படங்கள் மற்றும் வீடியோக்களின் வக்கிரத்தை கண்டு மனதளவில் பாதிக்கப்பட்ட மூன்று போலீசார் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளனர். பிடிபட்ட 87 பேரின் பின்னால் பல்லாயிரக்கணாக்கான பேர் உள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான ஜார்ஜுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாத குழந்தை முதல் பல குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டு, அதனை ஒரு குற்றமாக கூட கருதாமல், ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து கண்ட சம்பவம் ஜெர்மன் நாட்டை உலுக்கியுள்ளது.

மற்ற செய்திகள்