'உன் போக்கே சரியில்ல!.. உண்மைய சொல்லு யார் நீ'?.. மர்ம பெண்ணை மடக்கிப் பிடித்த ஜெர்மனி அரசு!.. விசாரணையில் பகீர் திருப்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளதால் தீவிரவாதம் குறித்து உலக நாடுகள் கவலை கொண்டிருக்கும் நிலையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பெண் ஒருவர் செய்த உதவி குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Munichக்கு அருகிலுள்ள Geretsried என்ற இடத்தில் ஜெர்மன் அரசு அதிகாரிகள் அதிரடியாக ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர்.
Denise S. என்ற அந்த பெண், ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்காக பணம் சேகரித்ததாகவும், மத்திய கிழக்கு நாடுகளுடன் அந்த அமைப்பினர் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு உதவிவருவதாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர்களுக்கு அனுப்புவதற்காக பணம் சேகரிக்கப்படுவது குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவிப்பதற்காக ஐ.எஸ். அமைப்பிலுள்ள பெண் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஐ.எஸ். அமைப்பின் பெண் உறுப்பினர் ஒருவர் குர்திஷ் அகதிகள் முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் ஐ.எஸ். அமைப்புக்கு திரும்ப உதவும் வகையில், அவருக்காக Denise நிதி திரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேபோல் ஜெர்மனியிலுள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்காக நிதி திரட்டி அனுப்பிய Aymen A.-J. என்ற ஈராக்கியர் ஒருவருக்கும் Denise ஆதரவளித்ததாகவும் கருதப்படுகிறது.
ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புக்கு பெண் ஒருவர் உதவி செய்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்