'8 வாய்ப்ப இழந்தாச்சு...' 'இன்னும் ரெண்டே சான்ஸ் தான்...' 'மறந்து போன பாஸ்வேர்ட்...' 'இந்த பாஸ்வேர்ட் மட்டும் கெடைக்கலன்னா...' - பதற்றத்தின் உச்சியில் இளைஞர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் தனது பாஸ்வேர்ட்களை சேமித்து வைத்திருக்கும் ஹார்ட் டிஸ்க்கின் பாஸ்வேர்ட் மறந்ததால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த புரோகிராமர் ஸ்டீபன் தாமஸ் என்ற இளைஞர் தற்போது சான் பிரான்சிஸ்கோவில் வசித்துவருகிறார். பிட்காயின்களில் முதலீடு செய்யும் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் பிட்காயின்களின் மதிப்பு அவ்வளவாக அதிகமாக இல்லாத காலத்தில், இவருக்கு ஒரு போட்டியில் 7002 பிட்காயின்கள் பரிசாக கிடைத்துள்ளன.
ஸ்டீபன் பிட்காயின்கள் அடங்கிய டிஜிட்டல் வாலெட்டின் பாஸ்வேர்டை, அயர்ன் கீ என அழைக்கப்படும் ஒருவகை ஹார்ட் டிஸ்க்கில் தாமஸ் சேமித்து வைத்துள்ளார். அயர்ன் கீயின் பாஸ்வேர்டை ஒரு காகிதத்தில் எழுதிவைத்துள்ளார்.
இந்த சூழலில், தற்போது அவர் வைத்திருந்த பிட்காயின்களின் மதிப்பு ஏகத்திற்கு உயர்ந்திருப்பதால் இதற்கு முன் அவர் வைத்திருக்கும் பிட்காயின்களின் இன்றைய மதிப்பு சுமார் 1715 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன்காரணமாக, இந்த பிட்காயின்கள் அடங்கிய டிஜிட்டல் வாலெட்டின் பாஸ்வேர்டை சேமித்து வைத்திருந்த அயர்ன் கீயின் பாஸ்வேர்டை அவர் மறந்துவிட்டார். துருதஷ்டவசமாக பாஸ்வர்ட் எழுதி வைத்திருந்த காகிதமும் தொலைந்துவிட்டது.
இதுவரை 8 முறை அந்த அயர்ன் கீயின் பாஸ்வேர்டை முயற்சித்தும் அனைத்துமே தவறானது என வந்துள்ளது. மேலும் அயர்ன் கீயின் பாஸ்வேர்டை பத்து முறை தவறாக போட்டால், அதில் உள்ள தகவல்களை மீண்டும் பெற முடியாது என்ற சூழலில் இன்னும் இரண்டு முறை மட்டுமே உபயோகப்படுத்த இயலும்.
இதுகுறித்து கூறிய தாமஸ், 'நான் என்னுடைய பாஸ்வேர்டை பற்றி யோசித்து கொண்டிருப்பேன். சில புதிய உத்திகளுடன் கணினிக்குச் செல்வேன். ஆனால், அது வேலை செய்யாது, நான் மீண்டும் யோசிக்க ஆரம்பிப்பேன்' என நம்பிக்கை தெரிவிக்கிறார். இதுவரை அவர் சேமித்த பிட்காயின்களின் மதிப்பு சுமார் 1700 கோடி ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்