“இவன் ஃபோட்டோவ பாத்துக்கங்க.. ரொம்ப ஆபத்தானவன்.. வழியில காரை மறிச்சா நிறுத்தாதீங்க”... பீதியில் உறைந்த மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனியில் கிராமம் ஒன்றில் போலீஸாரின் ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு தப்பிய நபரால் குயிருப்புப் பகுதி மக்களுக்கு ஆபத்து உண்டாகலாம் என ஜெர்மன் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில் சாலையில் சந்தேகத்துக்குரிய நபர்கல் இருந்தால். வாகனங்களை நிறுத்தாமல் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று பகல் நேரத்தில் ஜெர்மனியில் ஒபெனாவ் மற்றும் ஒபர்கிர்ச் கிராமப் பகுதியில் இருந்து போலீஸாரின் ஆயுதங்களுடன் வனப்பகுதிக்குள் தப்பிய 31 வயதான யூவ்ஸ் ரௌஸ் என்பவரைத்தான் போலீஸார் சிறப்புப் படையினரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஒபெனாவில் உள்ள ஒரு குடியிருப்பில் ராணுவத்தினர் பயன்படுத்தும் உடையில் ஆயுதமேந்திய நபர் இருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீஸாரிடம், உதவி செய்வது போல் நடித்து, அவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி, துப்பாக்கி முனையில், காவலர்களின் ஆயுதங்களை பறித்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்ற தஞ்சம் புகுந்துவிட்டார் யூவ்ஸ் ரௌஸ்.
அவர் ஆபத்தானவர் என்பதால், பொதுமக்கள் அவரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென போலீஸார் எச்சரித்து அவருடைய புகைப்படத்தையும் ஆங்காங்கே விளம்பரப்படுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்