என்னோட 'அப்பா' இந்த 'உலகத்தையே' மாத்திட்டாரு... 'போராட்டக்களத்தின்' நடுவே 'இதயங்களை'... வென்ற மகளின் 'குரல்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தை 9 நிமிடங்களுக்கு மேலாக தனது பூட்ஸ் காலால் போலீசார் ஒருவர் மிதித்த நிலையில் ஜார்ஜ் மரணமடைந்தார்.

என்னோட 'அப்பா' இந்த 'உலகத்தையே' மாத்திட்டாரு... 'போராட்டக்களத்தின்' நடுவே 'இதயங்களை'... வென்ற மகளின் 'குரல்'!

அதுவும் பொது இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வைரலானதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் போராட்டக்களமாக மாறியது. பல இடங்களில் வன்முறையாகவும் மாறின. இனவெறிக்கு எதிராக நடைபெற்ற இந்த கொடூர கொலைக்கு அமெரிக்கா அல்லாது நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல உலக நாடுகளிலுள்ள மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் குறித்து, அவரது காதலி ராக்ஸி மற்றும் அவரது மகள் கியானா மற்றும் ஜார்ஜின் நண்பர்கள் இன்று உரையாற்றினர். இதனை தொடர்ந்து, ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் மகள் கியானா மற்றும் அவரது நண்பர் ஸ்டீபன் ஜாக்சன் ஆகியோர் பொதுவெளியில் தோன்றினர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் தனது தந்தையை குறித்து எழுப்பிய கேள்விக்கு கியானா, 'எனது தந்தை இந்த உலகத்தை மாற்றிவிட்டார்' என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருவதையடுத்து ஜார்ஜின் மகளின் மனதைரியத்தையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்