'இறப்பதற்கு' முன் அவருக்கு... பிரேத 'பரிசோதனை' அறிக்கையில்... வெளியான 'புதிய' தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்போலீஸ்காரரின் பிடியில் இறந்து போன ஜார்ஜின் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்(46) போலீஸ் பிடியில் கடந்த 25-ம் தேதி இறந்து போனார். போலீசார் அவரின் கழுத்தில் மிதித்ததில் மூச்சுத்திணறி அவர் இறந்து போனதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. போலீஸ் பிடியில் ஜார்ஜ் இருக்கும் காட்சிகள் வெளியாகி உலகம் முழுவதையும் அதிர வைத்தது.
இதற்கிடையில் ஜார்ஜின் மரணத்திற்கு நீதி கேட்டு ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க மக்கள் வீதிகளில் இறங்கி கடந்த 8 நாட்களாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் இறந்து போன ஜார்ஜுக்கு கொரோனா இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
குடும்பத்தினர் சம்மதத்துடன் அவரின் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள் வெளியிட்டு இருக்கின்றனர். 20 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் ஜார்ஜ் இறப்பதற்கு முன் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரணத்திற்கான காரணமாக கடுமையான சுவாச மன அழுத்தம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்