'கழுத்தில்' மிதித்ததில் மூச்சுத்திணறி... 'ஆக்சிஜன்' தடைபட்டு இறந்துள்ளார்... அதிர வைக்கும் 'பிரேத' பரிசோதனை அறிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடிக்க காரணமாக இருந்த ஜார்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற 42 வயது கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் போலீஸ் பிடியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை கீழே தள்ளி அவரின் கழுத்தில் போலீஸ் ஒருவர் கால் முட்டியால் மிதிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. இதையடுத்து ஜார்ஜின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் தலைதூக்க ஆரம்பித்து இருக்கின்றன.
அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்கள் தற்போது கலவரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளன. பல்வேறு நகரங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கட்டு இருந்தாலும், போராட்டக்காரர்கள் அஞ்சாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் போராட்டக்காரர்கள் தொடர்பாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களால் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனால் கொரோனா கலவரங்களுக்கு மத்தியிலும் இந்த கலவரங்களை உலகம் உற்றுநோக்கி வருகிறது.
இந்த நிலையில் போலீஸ் பிடியில் இருந்த ஜார்ஜ் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அறிக்கையில்,''காவலர் பிடியிலிருந்த ஜார்ஜின் கழுத்தில் ஏற்பட்ட அதிகப்படியான அழுத்தம் காரணமாக இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து மூச்சுத்திணறல் உருவாகி உயிரிழந்துள்ளார்,'' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து அந்த மருத்துவர் கொலை என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்