'இப்படி ஒரு ஆளை என் லைஃப்ல பாத்தது இல்ல'... 'ட்ரம்ப் குறித்து வெள்ளை மளிகை அதிகாரி சொன்ன தகவல்'... பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெள்ளை மளிகை முன்னாள் அதிகாரி ஜெனரல் ஜான் கெல்லி. இவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த அவர், பின்னர் வெள்ளை மாளிகையின் முதன்மை அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். பின்னர் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு ஜெனரல் ஜான் கெல்லி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

'இப்படி ஒரு ஆளை என் லைஃப்ல பாத்தது இல்ல'... 'ட்ரம்ப் குறித்து வெள்ளை மளிகை அதிகாரி சொன்ன தகவல்'... பரபரப்பு சம்பவம்!

இந்நிலையில் ட்ரம்ப்புடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசிய அவர், அவருடன் பணியாற்றுவது என்பது பரிதாபத்திற்குரிய செயல் எனக் குறிப்பிட்டுள்ளார். எனது வாழ்நாளில் ட்ரம்ப்பைப் போன்று ஒழுக்கமற்ற நபரைப் பார்த்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரின் நேர்மையின்மையின் ஆழம் எனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் ஒழுக்கமற்ற செயல்பாடு அவரது ஆட்சியிலும், அவர் எடுக்கும் முடிவுகளிலும் தெளிவாகப் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில், ஜெனரல் ஜான் கெல்லி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்