உலக பணக்காரர்கள் பட்டியல்.. பில் கேட்ஸை பின்னுக்குத்தள்ளிய கவுதம் அதானி .. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரபல போர்ப்ஸ் இதழ் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்-ஐ பின்னுக்குத்தள்ளியிருக்கிறார் இந்தியாவின் கவுதம் அதானி.

உலக பணக்காரர்கள் பட்டியல்.. பில் கேட்ஸை பின்னுக்குத்தள்ளிய கவுதம் அதானி .. முழு விபரம்..!

Also Read | ராணுவ வீரரின் காலை தொட்டு வணங்கிய சிறுமி.. MP பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!

பில் கேட்ஸ்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1955 ஆம் ஆண்டு பிறந்த பில் கேட்ஸ் உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினை துவங்கியவர்களில் ஒருவராவார். இளம் வயதிலேயே புரோகிராமிங் செய்வதில் வல்லவராக திகழ்ந்த பில் கேட்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது நண்பர் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி துவங்கினார்.

உலக பணக்காரர்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் வெற்றிநடை போடத்துவங்கிய காரணத்தினால் பெரும் செல்வந்தர் ஆனார் பில் கேட்ஸ். உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து 12 முறை முதலிடத்தில் இருந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2021 ஆம் ஆண்டு வெளிவந்த போர்ப்ஸ் இதழிலின் அடிப்படையில் இவர் உலகின் நான்காவது பணக்காரராக இருக்கிறார். மனிதாபிமான சேவைகளையும் உலகம் முழுவதிழும் தனது அறக்கட்டளை மூலமாக பில் கேட்ஸ் செய்து வருகிறார்.

Gautam Adani world 4th richest on Forbes list after Bill Gates 20 bn d

இந்நிலையில், கடந்த வாரம் கேட்ஸ் அறக்கட்டளைக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளார் பில் கேட்ஸ். இதனால் இவருடைய மொத்த சொத்துமதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்திருக்கிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"இன்னும் கூடுதலாக பணத்தை வழங்குவதன் மூலம், மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சில துன்பங்களைத் தணிக்கலாம். ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழ உதவ முடியும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் உலக பணக்கார்களின் பட்டியலில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் கேட்ஸ்.

கவுதம் அதானி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் கவுதம் அதானி. இவருடைய பெற்றோர் சாந்திலால் அதானி - சாந்தி ஆவர். உள்ளூரிலேயே பள்ளிக் கல்வியை முடித்த கவுதம் அதானி, குஜராத் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பிரிவில் சேர்ந்தார். ஆனால், இரண்டாம் ஆண்டே கல்லூரியை விட்டுவிட்டு பணிக்குச் சென்றுவிட்டார். துணி வியாபாரம் செய்துவந்த தனது தந்தையை அருகிலிருந்து பார்த்து வளர்ந்த அதானி 1988 ஆம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட்ஸ் எனும் ஏற்றுமதி நிறுவனத்தை துவங்கினார். இதுவே, இன்று உலகளவில் பிரபலமான அதானி குழுமமாக வளர்ந்து நிற்கிறது. பிரீத்தி என்பவரை அதானி திருமணம் செய்துகொண்டார். அதானி அறக்கட்டளையை தற்போது ப்ரீத்தி நிர்வகித்து வருகிறார்.

Gautam Adani world 4th richest on Forbes list after Bill Gates 20 bn d

இந்நிலையில் இவருடைய சொத்துமதிப்பு 112 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் உலக பணக்காரர்களின் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்குத்தள்ளி 4 ஆம் இடத்தை பிடித்திருக்கிறார் அதானி.

Also Read | ஆபீஸ்லயே இனி தூங்கலாம்.."தொழிலாளர்களின் Health தான் முக்கியம்"..முன்னணி நிறுவனம் கண்டுபிடிச்ச "தூங்கும் பெட்டி".. அட இது நல்லாருக்கே..!

GAUTAM ADANI, BILL GATES, FORBES LIST, DONATION

மற்ற செய்திகள்