'திடீரென கேட்ட பயங்கர சப்தம்'... 'தெறித்து ஓடிய மக்கள்’... ‘55 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெருவில் இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி குடியிருப்பு குதிக்குள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படு தீக் காயங்களால் அவதிபட்டு வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'திடீரென கேட்ட பயங்கர சப்தம்'... 'தெறித்து ஓடிய மக்கள்’... ‘55 பேருக்கு நிகழ்ந்த பரிதாபம்'!

பெருவின் தலைநகர் லிமாவில் டிரான் கேஸ் என்ற நிறுவனத்தின் டேங்கர் லாரி இயற்கை எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. குடியிருப்பு பகுதிக்குள் சென்றபோது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் மோதியது. அப்போது டேங்கர் லாரியில் இருந்த எரிவாயு வெளியேறி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. திடீரென பற்றிய தீயால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். இதில் 5 பேர்  தீயில் கருகி உயிரிழந்தனர்.

பெரும்பாலான குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தில் 20 கட்டடங்களும் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

PERU, ACCIDENT, GAS, DIED, INJURED