பொம்மைகளினால் 'புதுப்புது' விளையாட்டு.. நடக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 'கோடீஸ்வரன்' ஆன சிறுவன்... !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

யூ டியூப் சேனல்கள் மூலம் உலக அளவில் பல பேர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர். பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அந்த சேனல்களை நிர்வகிப்பவர்களுக்கு 'யூ டியூப்' நிறுவனம் பணம் வழங்கும்.

பொம்மைகளினால் 'புதுப்புது' விளையாட்டு.. நடக்க தொடங்கிய சில ஆண்டுகளிலேயே 'கோடீஸ்வரன்' ஆன சிறுவன்... !

இதுபோல், யூ டியூப் சேனல்களை நிர்வகிப்பவர்கள் ‘யூ டியூபர்ஸ்' என அழைக்கப்படுகிறார்கள். நடப்பாண்டில் உலக அளவில் அதிக ஊதியம் பெறும் ‘யூ டியூபர்ஸ்' பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த ரியான்காஜி என்ற 8 வயது சிறுவன் முதலிடத்தை பிடித்திருக்கிறான். ஆண்டுக்கு 26 மில்லியன் (ரூ.184 கோடி) அவனது ஊதியமாக இருக்கிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் ரியானுக்கு, பிறந்தது முதலாகவே பொம்மைகள் மீது அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. பின்னர் நடக்கத் தொடங்கிய பருவத்தில், விதவிதமான பொம்மைகளை வைத்து புதுவகையான விளையாட்டுகளை செய்திருக்கிறான். அவனது இந்த செயல்பாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ஒருமுறை, ரியானின் இந்த பொம்மை விளையாட்டுகளை படம் பிடித்து அவனது தந்தை யூ டியூபில் பதிவிட்டிருக்கிறார். சிறிது நாட்களுக்கு பிறகு அந்தப் பதிவை பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வீடியோ பதிவிட்ட நான்கே நாட்களில், சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அதனை பார்த்திருந்தனர்.

இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு சொந்தமாக யூ டியூப் சேனலை தொடங்கி, ரியானின் வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். ‘ரியான் வேர்ல்ட்' என்ற சேனலில் பதிவிடப்படும் இந்த வீடியோக்களை லட்சக்கணக்கானோர் பார்த்து வருவதால் அவருக்கு யூ டியூப் நிறுவனம் மாதந்தோறும் கோடிக்கணக்கில் பணம் வழங்கி வருகிறது.

தற்போது 8 வயதை எட்டியுள்ள சிறுவன் ரியான், பொம்மை விளையாட்டுகள் மட்டுமின்றி சிறிய அளவிலான அறிவியல் பரிசோதனைகளையும் செய்து வருகிறான். இது தொடர்பான வீடியோக்களும் யூ டியூபில் வைரலாகி வருகிறது.

YOUTUBE, GAME, BOY, AMERICA