"ஒருவேளை அதுநடந்தா பூமியில பாதிபேர் இருக்கமாட்டாங்க'.. வெளியான ஆய்வுக்கட்டுரை.. வெலவெலத்துப்போன உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒருவேளை அமெரிக்கா - ரஷ்யா இடையே முழு அளவிலான அணு ஆயுத போர் நடந்தால் விளைவுகள் எப்படி இருக்கும்? என ஆய்வில் ஈடுபட்டுவந்த நிபுணர்கள் புது ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
போர்
உலக நாடுகளுக்கு இடையேயான போர் என்பது எப்போதும் அப்பாவி மக்களையே பெரிதும் பாதிக்கும். லட்சக்கணக்கில் உயிரிழப்புகள், பல பில்லியன் மதிப்பில் சேதம் என போர் உருவாக்கும் மோசமான விளைவுகளை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. இதுவே, அணு ஆயுதங்களை போரில் நாடுகள் பயன்படுத்தினால் நினைத்துப்பார்க்க முடியாத அளவு பேரழிவுகளை மனிதகுலம் சந்திக்கும் என ஐநா உள்ளிட்ட உலக அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா - ரஷ்யா இடையே முழு அளவில் போர் நடைபெற்றால் விளைவுகள் எப்படி இருக்கும் என ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக (Rutgers University) விஞ்ஞானிகள் ஆறு வெவ்வேறு அணுசக்தி யுத்த சூழ்நிலைகளின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுக்கட்டுரை பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் ஒருவேளை அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்றால் உலகில் பாதிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு
இந்த ஆய்வுக் கட்டுரை நேச்சர் புஃட் (Nature Food) என்னும் இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில்,"அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது இரு நாடுகளுக்கு இடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டால்கூட, உலகளாவிய பஞ்சத்துக்கு வழிவகுக்கும். இதன்மூலம் 500 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும். அணுசக்தி போர், காலநிலை மாற்றத்தில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வெப்பத்தால் ஓசோன் படலம் அழிந்துவிடும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ரஷ்யா இடையிலான போர் நடைபெற்றால் உலக நாடுகளில் விளையும் பயிர் உற்பத்தி 90 சதவீதம் பாதிக்கப்படும் எனவும் இதனால் கடும் பஞ்சத்தை உலக நாடுகள் சந்திக்கும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். போர் நடந்த 3 அல்லது 4 ஆண்டுகளில் இந்த தாக்கத்தினை மக்கள் உணரலாம் என அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மற்ற செய்திகள்