'சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள்'... 'திடீரென வெடித்துச் சிதறிய லாரி'... '11 குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோருக்கு நடந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்சிரியாவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில், குண்டு வெடித்ததில் 11 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரால், அங்கு துருக்கி தலைமையிலான கூட்டுப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அங்குள்ள அலொப்போ மாகாணம் அஃப்ரின் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையில் மக்கள் கூட்டம் நேற்று அதிகமாகக் காணப்பட்டது. ரமலான் நோன்பு மாதத்தில் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூடியிருந்தனர். அப்போது எரிபொருள் நிரப்பிய லாரி ஒன்று கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
அந்த லாரியில் தீவிரவாதிகள் நிரப்பிய வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில், சந்தையில் கூட்டமாக இருந்த மக்கள் அலறித்துடித்தனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 குழந்தைகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து நகரை அடுத்த மஹ்மூதியே பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. கொரோனா வைரஸ் நேரத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.