"3 வருஷமா போராடிட்டு இருக்கேன்... இன்னும் எனக்கு 'நீதி' கெடைக்கல..." 'தலை' சுற்ற வைக்கும் பெண்ணின் உண்மைக் 'கதை'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரெஞ்சு நாட்டின் லியான் பகுதியை சேர்ந்தவர் 58 வயதான ஜென்னி போவுசைன் (Jeanne Pouchain).

"3 வருஷமா போராடிட்டு இருக்கேன்... இன்னும் எனக்கு 'நீதி' கெடைக்கல..." 'தலை' சுற்ற வைக்கும் பெண்ணின் உண்மைக் 'கதை'!!!

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜென்னி இறந்ததாக தனது முன்னாள் சக ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் முடிவில் தொழிலாளர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தான் இன்னும் உயிருடன் இருப்பதை நிரூபிக்க கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறார் ஜென்னி.

ஜென்னியின் பெயர் அனைத்து அரசு சம்பந்தமான பதிவுகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், அவர் தனது ஐடி கார்டு, டிரைவிங் லைசன்ஸ் உட்பட அனைத்தையும் இழந்து தவித்து வருகிறார். தன்னுடைய தற்போதைய நிலைக்கு காரணமான முன்னாள் ஊழியரை ஜென்னி குறை கூறி வரும் நிலையில், இது வேடிக்கையான கதையாக இருக்கிறது என ஜென்னியின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டின் போது, ஜென்னி இறந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லாமல், அவர் இறந்ததாக நீதிமன்றம் எப்படி தீர்ப்பளித்தது என அந்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பும் நிலையில், தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு போலியானது என்பதை நிரூபிக்க ஜென்னி மூன்று ஆண்டுகளாக போராடி வருவதையும் குறிப்பிட்டார்.

தான் உயிருடன் இருப்பதற்கு மருத்துவ சான்றிதழ் போதுமானதாக இருக்கும் என ஜென்னி நினைத்த நிலையில், இன்னும் பல ஆதாரங்களை அரசு எதிர்பார்க்கின்றது. 'நான் இறக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் நான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என அரசு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அப்படி பார்த்தால் நான் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறேன்' என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்