நிஜ ஸ்பைடர் மேனின் திகைக்க வைக்கும் சாதனை.. கயறு கூட இல்ல.. அவர் சொன்ன காரணம் தான் வெயிட்டே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பிரான்ஸை சேர்ந்த நபர் செய்திருக்கும் சாதனை உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

நிஜ ஸ்பைடர் மேனின் திகைக்க வைக்கும் சாதனை.. கயறு கூட இல்ல.. அவர் சொன்ன காரணம் தான் வெயிட்டே..!

பிறந்தநாள்

பிரான்ஸை சேர்ந்தவர் அலைன் ராபர்ட். இவர் கடந்த மாதம் தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாட்டை பொறுத்தவரையில் 60 வயதில் பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால், வயது வெறும் எண் மட்டுமே என நம்புபவர் ராபர்ட். இதனை உலகிற்கு உரக்க சொல்ல நினைத்தார் அவர். அதற்காக அவர் எடுத்த முயற்சி தான் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது. பொதுவாக விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள் வாழ்வின் எந்த கணத்திலும் சாதனைகளை படைக்க முனைவார்கள். அப்படி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உயரமான கட்டிடத்தில் ஏறி தனது 60 வது பிறந்தநாளை கொண்டாட நினைத்திருக்கிறார் ராபர்ட்.

French Spiderman climbs Paris skyscraper to mark turning 60

இதற்காக அவர் தேர்நதெடுத்த கட்டிடம் Total Energies நிறுவனத்திற்கு சொந்தமானது. 48 தளங்களை கொண்ட இந்த வானளாவிய கட்டிடத்தை வெறும் 60 நிமிடங்களில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் ராபர்ட். இந்த அபாயகரமான பயணத்தில் கயறுகளோ அல்லது பாதுகாப்பு சாதனங்களோ இல்லாமல் உச்சியை நோக்கி விரைந்திருக்கிறார் இவர். 1970 களில் கட்டிடங்களில் ஏறும் சாகசத்தை துவங்கிய ராபர்ட் இதற்கு முன்னரும் இந்த Total Energies கட்டிடத்தில் ஏறியுள்ளார்.

சபதம்

இதுபற்றி பேசிய ராபர்ட்,"நான் இதற்கு முன்னரும் இந்த கட்டிடத்தில் எறியுள்ளேன். அப்போது, எனக்கு 60 வயதாகும்போது அதை உலகிற்கு சொல்லும் விதத்தில் மீண்டும் இந்த கட்டிடத்தில் ஏறவேண்டும் என உறுதியெடுத்துக்கொண்டேன். அதன்படி இந்த முயற்சியில் இறங்கினேன். பெரும்பாலானோர் 60 வயதை அடைந்தவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். ஆனால், தன்னம்பிக்கை இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும்" என்றார். வழக்கமாக பாதுகாப்பு உடை, சிறிய வாட்டர் பாட்டில், வியர்வையை துடைத்துக்கொள்ளும் சிறிய துணி ஆகியவற்றை மற்றும் எடுத்துக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் கட்டிடத்தின் மேல்தளத்தை அடைந்திருக்கிறார் ராபர்ட்.

French Spiderman climbs Paris skyscraper to mark turning 60

தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்தவுடன், கட்டிடத்தின் உச்சியில் இருந்து கைகளை உயர்த்தி தனது சந்தோசத்தை வெளிப்படுத்த, கீழே நின்றிருந்த மக்கள் ஆரவாரம் செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

FRENCH SPIDERMAN, SKYSCRAPER, ALAIN ROBERT, அலைன் ராபர்ட், ஸ்பைடர்மேன், பாரிஸ்

மற்ற செய்திகள்