நண்பர்களை டின்னருக்கு அழைத்த தம்பதி.. "நைட்டு வீட்டுக்கு வந்து பாத்தப்போ 2 பேரையும் காணோம்.." கடைசியில் காத்திருந்த 'பயங்கரம்'!!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தை சேர்ந்த வயதான தம்பதி, பிரான்ஸ் நாட்டில் உள்ள தங்களின் வீட்டில் வைத்து விருந்து ஒன்றிற்கு அப்பகுதியில் உள்ள நண்பர்கள் சிலரை அழைத்த நிலையில், உள்ளே சென்று பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
Also Read | பேஸ்புக் மூலம்.. தாயின் மறைவு பற்றி தெரிந்து கொண்ட மகன்.. மனம் நொறுங்க வைத்த 'பின்னணி'!!
பிரிட்டனை சேர்ந்த சுமார் 80 வயதை அடுத்த தம்பதியர், தங்களின் விடுமுறையை கழிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டில் Herault என்ற பகுதியில் அமைந்துள்ள தங்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் ஒரு இரவு நேரத்தில், தங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வர வேண்டும் என அவர்களின் வீட்டை சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிலருக்கும் அந்த தம்பதியர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன் படி, வயதான தம்பதியரின் அழைப்பினையும் ஏற்று, அன்றைய தினம் இரவு அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கே கணவன், மனைவி என இருவரையும் அங்கே காணவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, வீட்டிற்குள் சென்று அவர்கள் இருவரையும் விருந்துக்கு வந்தவர்கள் தேடி உள்ளனர்.
அப்போது, அவர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. பிரிட்டன் தம்பதியினர், அவர்கள் வீட்டின் பின்னால் இருந்த நீச்சல் குளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதனைக் கண்டதும் அவர்கள் பீதியில் உறைந்து போகவே, உடனடியாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கே சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தரப்பில் இருந்து வெளியான தகவலின் படி, தம்பதியரில் ஒருவர் தண்ணீரில் தவறுதலாக மூழ்குவதைக் கண்டு, அவரைக் காப்பாற்ற சென்ற மற்ற நபரும் சேர்ந்து, பின்னர் இருவருமாக தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களை விருந்துக்கு அழைத்த வயதான தம்பதி, அவர்கள் வீட்டிற்க்கு வந்து பார்த்த போது, அங்கே நீச்சல் குளத்தில் இறந்து கிடந்த சம்பவம், அனைவரையும் கடும் பதற்றத்திற்குள் ஆழ்த்தி உள்ளது.
மற்ற செய்திகள்