அவ்ளோ 'வெறி' ஆகுது...! எங்க 'முதுகு'ல குத்திட்டீங்க இல்ல...? அப்போ எங்ககிட்ட வந்து 'பேசினதெல்லாம்' சும்மா, அப்படி தானே...? - கடுப்பில் கொந்தளிக்கும் நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து தங்கள் நாட்டை முதுகில் குத்தியதாக பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அரசு, பிரான்சின் நேவல் குழுமத்திடம் இரண்டு இலட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், அணு ஆற்றலால் இயங்கும் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.
ஆனால், கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஆஸ்திரேலிய, பிரிட்டன் பிரதமர்கள் ஒன்று கூடி பேசி கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துக்கொண்டனர்.
இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதன் குறித்து பிரெஞ்ச் வெளியுறவு அமைச்சர் ஜீன் யேஸ் லீ டிரையன் கூறுகையில் 'தற்போது பைடன் செய்த இந்த செயல், கடந்த ஆட்சி அமெரிக்க அதிபரான டிரம்பின் செயலை நினைவூட்டுகிறது. இதனால் எனக்கு ஆத்திரமும் கசப்புணர்வும் தோன்றுகிறது. இது அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து எங்கள் நாட்டை முதுகில் குத்தும் செயல் போன்றது' என கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்