சத்தமே இல்லாம 'எத்தனையோ' சம்பவங்கள் நடந்துருக்கு...! ஒரு காலத்துல 'எப்படி' இருந்த இடம்...! - இன்னைக்கு 'அடையாளமே' தெரியாம மாறிடுச்சு...!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப்போரின் போது பிரான்சில் உருவாக்கப்பட்ட பதுங்குக் குழிகள் தற்போது விருந்தினர் இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 1940-ஆம் ஆண்டு வடக்கு கடற்கரை பகுதியில் இரண்டாம் உலக போரின் போது பல்வேறு பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டன.
இந்த குழிகள் இருக்கும் பகுதிகளில், ரேடார் நிலையங்கள் அமைத்து விமானங்களை கண்காணித்து வந்ததாக தெரிகிறது. அந்த இடத்தில் போர் யுக்திகளுக்காக எத்தனையோ முடிவுகள் எடுக்கப்பட்டு, நாட்கணக்காக காத்திருந்து போரை எதிர்கொண்டிருப்பர்.
இந்நிலையில் செர்ஜி என்பவர், பதுங்குக் குழிகளை விருந்தினர் இல்லங்களாக மாற்றி வந்து கொண்டிருக்கிறார். சுமார் 400 சதுர மீட்டர் கொண்டதாக இருக்கும் இந்த பதுங்குக் குழிகள் அறைகளாக மாற்றபட்டுள்ளது. அந்த இடத்தில் அப்படி ஒரு பதுங்குக் குழிகள் இருந்ததே தெரியாத அளவிற்கு தத்ரூபமாக மாற்றியுள்ளார்.
இவற்றை முழுவதும் சுமார் 18 மாதங்களில் விருந்தினர் இல்லமாக மாற்றி தற்போது வாடகைக்கு விட்டும் வருகிறார் செர்ஜி.
மற்ற செய்திகள்