‘சம்பளம் நாங்க தர்றோம்!.. ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பாதீங்க.. பார்ட் டைம் வேலையாவது கொடுங்க!’.. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அரசு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அரசு வழங்கும் கொரோனா உதவித் திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுங்கள் என்றும் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப வேண்டாம் என்றும் பிரான்ஸ் நாடு, அந்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

‘சம்பளம் நாங்க தர்றோம்!.. ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பாதீங்க.. பார்ட் டைம் வேலையாவது கொடுங்க!’.. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அரசு!

நாட்டின் பொருளாதாரத்தை கொரோனா கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புவதை தவிர்ப்பதற்காக அரசு வழங்கும் நிதி உதவியை பெற்றுக்கொண்டு ஊழியர்களுக்கு பகுதி நேர வேலைக்காவது திரும்பும் வகையிலான ஒப்பந்தங்களை செய்து கொள்ளுமாறு பிரான்ஸ் நாட்டு பிரதமர் தன் நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் செப்டம்பருக்கும் நவம்பர் 1க்கும் இடையில், இந்த ஒப்பந்தங்களை வெகு விரைவாக செய்து கொள்ளுமாறு  பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.  chomage partiel என்னும் இந்தத் திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்களை செய்து கொள்ளுமாறும் இதனால் ஊழியர்கள் அனைவருக்கும் பகுதி நேர வேலை கிடைத்தாலும் கூட 93 சதவீத ஊதியத்தை அரசே வழங்கும் என்றும் அந்த ஊதியத்தை பயன்படுத்திக்கொண்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த திட்டம் அடுத்த கோடை காலம் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்