சதையுடன் இருந்த டைனோசர் கால்.. 66 மில்லியன் வருஷ கேள்விக்கு பதில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்.!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் எலும்பும் தசையாக ஒரு டைனோசரின் காலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது நீண்டகால கேள்விகளுக்கு பதிலளிக்கும் என நம்புகிறார்கள் ஆய்வாளர்கள்.
டைனோசர் காலம்
உலகத்தில் உயிரினங்கள் தோன்றி அவை பரிணாமம் அடைந்த வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தவை டைனோசரின் தோற்றம். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியின் பெரும்பான்மையான இடங்களில் வசித்து வந்ததாக கூறப்படும் டைனோசர்களுக்கு முடிவுரை எழுதியது ஒரு விண்கல். ஆம். பூமியின் மீது ஒரு ராட்சச விண்கல் மோதியதன் காரணமாக பூமி முழுவதும் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து மாபெரும் பேரிடர் நேர்ந்திருக்கிறது. இதன் காரணமாக டைனாசர்கள் அழிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துவந்தனர்.
ஆராய்ச்சி
அமெரிக்காவின் டகோட்டா பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் சமீப காலங்களில் அதிகரித்துவருகின்றன. காரணம், இங்குள்ள பாறைகள் விண்கல் மோதியதன் காரணமாக உருவானவை. விண்கல் விபத்தில் சிக்கி இறந்த உயிரினங்களின் படிமங்கள் இந்த பாறைகளில் இருக்கின்றன.
இதுவே ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் நடந்த ஆய்வில் டைனோசரின் கால் ஒன்று கிடைத்திருக்கிறது. அதுவும் சிதைவடையாமல். எலும்பும் சதையுமாக பாறைக்கு அடியில் இருந்த டைனோசரின் காலை கண்டறிந்த ஆய்வாளர்கள் அதன் வயதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அதில்தான் அடுத்த ஆச்சர்யம் வெளிப்பட்டிருக்கிறது.
ஆச்சர்யம்
பாறையில் கிடைத்த டைனோசரின் கால் 66 மில்லியன் வருடங்கள் பழமையானது என தெரியவந்திருக்கிறது. அதாவது சரியாக விண்கல் விழுந்த காலத்தில் இந்த டைனோசரும் இறந்திருக்கிறது. இதற்கு முன்பே டைனோசரின் உடல் பாகங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை விண்கல் விழுந்த காலத்திற்கு முன்பு வாழ்ந்தவை. ஆகவே, சரியாக விண்கல் விழுந்த காலத்தில் வாழ்ந்த ஒரு டைனோசரின் உடல் பாகம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.
அதுமட்டுமல்லாமல், சிறிய வகை மீன்களும் இந்த பாறைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் சுவாரஸ்யம் என்னவெனில், இந்த பகுதியில் ஆறுகளோ ஏரிகளோ கிடையாது. விண்கல் விழுந்ததன் காரணமாக தூரத்தில் இருந்த நீர்நிலையில் இருந்து இடம்பெயந்ததன் காரணமாக மீன்கள் இந்த பாறைக்கு வந்திருக்கின்றன.
தொல்பொருள் ஆராய்ச்சியில் திருப்புமுனையாக கருதப்படும் இந்த கண்டுபிடிப்பு இன்னும் பல ரகசியங்களை வெளிப்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மற்ற செய்திகள்