“4 வருஷமா இப்படி ட்வீட் பண்றது...”.. அமெரிக்க முன்னாள் தேர்தல் செய்தித் தொடர்பாளரின் ‘சர்ச்சை ட்வீட்டும்.. உடனடி டெலிட்டும்’.. கிளம்பிய கடும் விமர்சனங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டனின் 2016 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் தேசிய செய்தித் தொடர்பாளராக பணியாற்றியவர் ஜாரா ரஹீம்.
முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் டிஜிட்டல் குழு அலுவலகத்தில் பணியாற்றிய இவர், டிரம்புக்கு கொரோனா உறுதியான தகவல் வெளியானதை அடுத்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
Shocking & shameful.
This now deleted tweet was the reaction to President Trump testing positive for Covid-19 from @ZaraRahim - former Obama White House staffer and Hillary Clinton’s former 2016 National Spokeswoman. pic.twitter.com/FKYGGPfWf9
— Piers Morgan (@piersmorgan) October 2, 2020
அந்த ட்வீட்டில், “கடந்த 4 ஆண்டுகளாக இப்படி ட்வீட் செய்வது எனது தார்மீக அடையாளத்திற்கு எதிரானதுதான், ஆனால் , அவர் மறைந்துவிடுவார் என நம்புகிறேன்” என பதிவிட்ட ரஹீம் உடனே அப்பதிவை நீக்கியதாக தெரிகிறது.
I’ll just leave these here... pic.twitter.com/NUtLHjUUki
— Brandon 🇺🇸🥓🥃 (@Brash_1) October 2, 2020
மேலும் இதுகுறித்த பதிவில், அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், டிரம்புக்கு கொரோனா உறுதியானதாக செய்தி வெளியானதை அடுத்து ரஹீம் இவ்வாறு பதிவிட்டதால், அவரின் மறைமுகமான இந்த ட்வீட்டுக்கு எதிராக பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மற்ற செய்திகள்