சொல்றதுக்கு 'நாக்கு' நடுங்குது...! நான் தான் 'இதெல்லாம்' சொன்னேன்னு தெரிஞ்சா என் 'உயிருக்கு' ஆபத்து...! - குண்டுவெடிப்பை நேரில் பார்த்த நபர் கதறல்...!-
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க சிறப்பு குடியேற்ற விசாவை பெற்றுதரும் சர்வதேச வளர்ச்சி குழுவின் முன்னாள் ஊழியர் ஒருவர் ஆப்கானில் இருந்து தப்பிவிட வேண்டும் ஆயிரக்கணக்கான மக்களோடு 10 மணி நேரமாக காபுல் விமான நிலையத்தில் இருந்துள்ளார்.
அப்போது, மாலை 5 மணி அளவில், ஒரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவம் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த குண்டு வெடிப்பை நேரில் பார்த்தா அந்த முன்னாள் ஊழியர் கூறுகையில், "என் கால்களுக்கு அடியில் இருந்து யாரோ தரையை இழுத்தது போல் இருந்தது. ஒரு கணம் என் காதுகளில் குண்டு வெடித்ததாக நினைத்தேன், அதற்குப்பின் சிறிது நேரம் என்னால் எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை.
மனிதர்களின் உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் காற்றில் பறப்பதை நான் கண்டேன். காயமடைந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் குண்டு வெடித்த இடத்தில் சிதறிக் கிடப்பதை நான் பார்த்து அறிந்துப் போனேன். என் வாழ்வில் முதன்முறையாக அழிவை பார்த்தேன்" என்று கண்கலங்க கூறியுள்ளார்.
காபூல் நகரம் தலிபான்களின் ஆட்சியின் கீழ் வந்துள்ளதால் தன்னை பழிவாங்கி விடுவார்கள். எனவே தனது அடையாளங்களை வெளியில் கூற வேண்டாம் என அந்த முன்னாள் ஊழியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சாலையிலும் கழிவுநீர் கால்வாயிலும் விழுந்துக் கிடக்கின்றனர். அதில் பாயும் சிறிய நீர் கூட ரத்தமாக மாறியுள்ளது.
உடல் ரீதியாக நான் நலமாக இருக்கிறேன். ஆனால் இன்றைய குண்டுவெடிப்பால் என் மனம் சீராக இயங்கவில்லை. சித்த பிரம்மை பிடித்தது போல் ஆகிவிட்டது. இந்த அதிர்ச்சி மீதி இருக்கும் என்னுடைய வாழ்க்கையை நிம்மதியாக வாழ விடாது" என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்