'உலக சுகாதார மையமே சொல்லிடுச்சு!'.. 'பிரான்ஸை' தொடர்ந்து 'பெல்ஜியம், இத்தாலி' நாடுகள் 'அடுத்தடுத்து' எடுத்த அதிரடி 'முடிவு'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா நோயாளிகளுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று பேசப்படும் மலேரிய மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை பிரான்ஸ் நாட்டினைத் தொடர்ந்து தற்போது பெல்ஜியம், இத்தாலி நாடுகளும் கைவிடுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக கொரோனா நோயாளிகல் இந்த மருந்தை உட்கொண்டால் இருதய பிரச்சனை உண்டாகலாம் என்று லான்செட் இதழில் கட்டுரை வெளியானை அடுத்து, இந்த மருந்தினை பயன்படுத்த பிரான்ஸ் தடை விதித்தது. இதனை அடுத்து தற்போது பெல்ஜியம் மற்றும் இத்தாலியிலும் இந்த மருந்தை நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக இந்த மருந்தினை பயன்படுத்துவதில் உறுதியாக நின்ற பெல்ஜியம், தற்போது பிரான்ஸைத் தொடர்ந்து, தங்கள் நாட்டிலும் அந்த மருந்தினை கைவிடச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார மையம், ஆரோக்கியத்தைக் கருதி இந்த மருந்தினை பற்றிய ஆராய்ச்சியை நிறுத்தியதோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும் பரிந்துரைத்ததுதான் இந்த நாடுகள் இத்தகைய முடிவினை எடுப்பதற்கான இன்னொரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்




கொரோனா சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து!.. 5 பேர் பலி!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!.. என்ன நடந்தது?
