"ஒரு கப் & சாசர் வீடியோ'வ 60 லட்சம் பேர் பாத்தாங்களா??.." மிரண்டு போய் கிடக்கும் நெட்டிசன்கள்.. "அப்படி அதுல என்னங்க இருக்கு!?"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்று நம்மில் பலரும் இணையதளத்தில் அதிக நேரத்தினை செலவிட்டு வரும் நிலையில், நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

"ஒரு கப் & சாசர் வீடியோ'வ 60 லட்சம் பேர் பாத்தாங்களா??.." மிரண்டு போய் கிடக்கும் நெட்டிசன்கள்.. "அப்படி அதுல என்னங்க இருக்கு!?"

அது மட்டுமில்லாமல், சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் நாளுக்கு நாள் ஏராளமான வினோதமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றையும் பார்த்து வருகிறோம்.

அப்படி சமீபத்தில், ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி, பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கப் அண்ட் சாசர்' வீடியோ

அந்த வகையில் ஒரு சாதாரண கப் மற்றும் சாசரை வைத்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, கிட்டத்தட்ட 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து, பலரையும் ஆச்சரியத்தில் மிரள வைத்துள்ளது. சாதாரணமாக ஒரு கப் மற்றும் சாசரை வைத்துக் கொண்டு, ஒரு வீடியோ எப்படி இந்த அளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தலாம் என பலரும் நினைக்கலாம். ஆனால் வைரலாகி வரும் இந்த வீடியோவில் கப் மற்றும் சாசரை தனித்தனியாக பார்க்கும் போது, மிக மிக சாதாரணமாக தான் தெரியும். ஆனால் அதே கப்பை சாசர் மீது வைத்து சுற்றி பார்க்கும் போது தான் ஒரு அபூர்வமான சம்பவம் நிகழ்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு விஷயம் தான், நெட்டிசன்கள் மத்தியிலும் ஹைலைட்டான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

flying bird in Cup and saucer video gone viral among netizens

மிரண்டு போன நெட்டிசன்கள்

அதாவது கப் மற்றும் சாசர் என இரண்டிலும் தனித்தனியே கோடுகள் உள்ளது. இதனால் அந்த கப்பை சாசர் மீது வைத்து, சுற்றிப் பார்த்தால், அதில் பறவை ஒன்று பறப்பது போல தெரிகிறது. கோடுகள் மூலம் கப்பில் பறவைகள் பறப்பது போல தோன்றும் நிலையில், பறவை மட்டுமில்லாமல் மற்ற சில விலங்குகளும் இந்த வகையில் தெரிவது போல டிசைன் செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த கப் மற்றும் சாசர், கொரியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ, ட்விட்டரில் ஒருவரால் பகிரப்பட, கிட்டத்தட்ட 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.

CUP AND SAUCER, VIRAL VIDEO

மற்ற செய்திகள்