பீச்-ல கிடந்த பாட்டிலை கண்டுபிடிச்ச அம்மா.. உள்ளே இருந்த லெட்டரை மகன் கிட்ட காட்டும்போது தெரியவந்த விஷயம்.. எல்லோரும் ஒருநிமிஷம் ஷாக் ஆகிட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் எதேச்சையாக கடற்கரையில் பாட்டில் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். அதில் இருந்த செய்தியை மகனிடத்தில் காட்டும்போதுதான் அவருக்கு பல சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.

பீச்-ல கிடந்த பாட்டிலை கண்டுபிடிச்ச அம்மா.. உள்ளே இருந்த லெட்டரை மகன் கிட்ட காட்டும்போது தெரியவந்த விஷயம்.. எல்லோரும் ஒருநிமிஷம் ஷாக் ஆகிட்டாங்க..!

Also Read | "எவரும் சொல்லாமலே".. அரசு பள்ளி மாணவியின் அட்டகாசமான குரல்.. பள்ளிக்கல்வித்துறை பகிர்ந்த வீடியோ.. வாழ்த்தும் நெட்டிசன்கள்..!

உலகம் மிகவும் சிறியது என பல படங்களில் பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். இணையம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் அது உண்மை தான் என்றாலும், தற்போது அமெரிக்காவில் நடைபெற்றிருக்கும் சம்பவம் ஒன்று அதனை நிரூபித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கேத்தி கிரேஸ். சமூக நல பணிகளில் ஈடுபாடு கொண்டவரான கேத்தி கடற்கரையை சுத்தம் செய்யும் முகாமில் தன்னார்வலராக ஈடுபட்டு வந்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்த இயான் புயல் கியூபாவை தாக்கியது. பின்னர் புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை கடுமையாக தாக்கிச் சென்றது. இதனால் பல மாகாணங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கடல் அலைகள் சீற்றத்தால் கடற்கரை பகுதிகள் மோசமாக சேதமடைந்தன. இந்நிலையில், தன்னார்வலர்கள் குழு புளோரிடா கடற்கரைகளை மறுசீரமைக்கும் பணிகளில் இறங்கியது.

இதில் ஒருவரான கேத்தி கடந்த நவம்பர் 30 ஆம் தேதி புளோரிடா கடற்கரையில் ஒரு பாட்டிலை கண்டுபிடித்திருக்கிறார். அதில், ஒரு புகைப்படம் இருந்திருக்கிறது. அதில், ரோமன், லெசியா மற்றும் ஜெனான் முரால் ஆகிய பெயர்கள் அடங்கிய லெட்டர் ஒன்று இருந்திருக்கிறது. இந்த மூன்று பேருடைய தந்தை அந்த பாட்டிலை கடற்கரையில் 2000 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி புதைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Florida Woman found Bottle message and surprised here is why

இந்த செய்தியை தனது மகன் மைக்கிலுக்கு அனுப்பியிருக்கிறார் கேத்தி. அப்போது அவர் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ரோமன் என்பவர் தன்னுடைய நண்பர் என்றும் இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்ததாகவும் பின்னர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இது கேத்தியை ஆச்சர்யத்தில் தள்ளியிருக்கிறது.

பின்னர் இந்த கடிதத்தை லெஸியா முரலுக்கு அனுப்பி இருக்கிறார் கேத்தி. இதனால் அவர் பெரிதும் ஆச்சர்யமடைந்திருக்கிறார். இதனை கண்டவுடன் உலகம் அவ்வளவு பெரியதல்ல என்பதை இந்த புகைப்படம் உணர்த்துவதாக லெசியா முரல் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி கேத்தி தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டு வந்திருக்கிறார். இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.

Also Read | மேட்ச் முடிஞ்ச அப்புறம் கைகுலுக்க போன ஸ்டோக்ஸ்.. விலகிப்போன பாக். வீரர்.. என்ன ஆச்சு?.. வீடியோ..!

FLORIDA, WOMAN, BOTTLE MESSAGE

மற்ற செய்திகள்