செல்ல நாயால் அடிச்ச ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிர்ஷ்டக்காரர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதற்கு காரணம் தனது நாய் தான் என்கிறார் அவர்.

செல்ல நாயால் அடிச்ச ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிர்ஷ்டக்காரர்..!

Also Read | காதலர்களுக்குள் வந்த சண்டை.. அவுட்டிங் போனப்ப இளைஞர் செஞ்ச காரியம்.. போலீசுக்கு பறந்த போன்கால்..!

அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமயங்களில் விபத்து போல சில நபர்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். அப்படித்தான் நடந்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த லியோனர்ட் லிண்டன் என்பவருக்கு. இந்த நிகழ்வு அமெரிக்கா முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செல்ல நாய்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்துவரும் லியோனர்ட் லிண்டன் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு லிவி என்று பெயர்சூட்டியுள்ள லிண்டன் அதனை வீட்டில் ஒரு உறுப்பினராகவே கருதுகிறார். இந்நிலையில், அவரது நாய் கர்ப்பமடைந்திருக்கிறது. எப்போதும் அதனுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்த லிண்டனுக்கு சமீபத்தில் ஒரு போன் கால் வந்திருக்கிறது. வெளியே சென்றிருந்த லிண்டனுக்கு போன் செய்த அவரது குடும்பத்தினர் விவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த லிண்டன் வீடு திரும்ப முடிவெடுத்துள்ளார்.

ஷாப்பிங்

பதற்றம் காரணமாக எப்போதும் வீட்டிற்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார் லிண்டன்.  காரை ஓட்டிக்கொண்டிருந்த அவர், சாலை ஓரத்தில் அமைந்திருந்த கடையை பார்த்ததும் தனது நாய்க்கு ஏதாவது வாங்கிச் செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார். இதனால் காரை பார்க் செய்துவிட்டு கடைக்கு உள்ளே சென்ற லிண்டன் சில பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அங்கு இருந்த லாட்டரி டிக்கெட் ஒன்றையும் வாங்கியுள்ளார்.

Florida Man Who Won 2M USD Lottery Credits His Pregnant Dog

இந்நிலையில், வீடு திரும்பிய லிண்டன் தனது செல்ல நாயை கவனித்துக்கொள்ளும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். சில நாட்கள் கழித்து தான் வாங்கிய லாட்டரிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 15.6 கோடி ரூபாய்) பரிசுத்தொகை கிடைத்திருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது.

நாய் தான் காரணம்

தனது லாட்டரியில் 2 மில்லியன் தொகை கிடைத்திருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை. பலமுறை சோதித்து பார்த்த பிறகு தனக்கு தான் ஜாக்பாட் விழுந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய அவர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்திருக்கிறார். இதுபற்றி  பேசுகையில்," என்னால் இதை இன்னும் நம்பவே முடியவில்லை. இதற்கு விவி தான் முழு காரணம். இந்த பணத்தில் எங்களது அதிர்ஷ்ட நாய் விவிக்கு கென்னல் (நாய்கள் வசிக்கும் சிறிய வீடு போன்ற அமைப்பு) வாங்க இருக்கிறோம்" என்றார்.

அமெரிக்காவில் தனது கர்ப்பிணி நாயால் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருப்பது பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

Also Read | விராட் கோலி பகிர்ந்த practice புகைப்படங்கள்… அனுஷ்கா ஷர்மாவின் ரொமாண்டிக் கமெண்ட்

FLORIDA MAN, 2M USD LOTTERY, PREGNANT DOG

மற்ற செய்திகள்