"மூளையை உண்ணும் அமீபா?".. பைப் தண்ணீரை பயன்படுத்தியதால் நடந்த அதிர்ச்சி?.. உலக அளவில் பீதியை உண்டு பண்ணிய சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா என்னும் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் நடந்த செய்தி தொடர்பான விஷயம், தற்போது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  

"மூளையை உண்ணும் அமீபா?".. பைப் தண்ணீரை பயன்படுத்தியதால் நடந்த அதிர்ச்சி?.. உலக அளவில் பீதியை உண்டு பண்ணிய சம்பவம்!!

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | "Kids எல்லாம் புடிச்சுட்டாரு"... தோசைல கலையை கலந்து ஊத்திய சமையல் கலைஞர்.. சபாஷ் போட வைத்த வீடியோ!!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, புளோரிடாவின் சார்லோட் கவுண்டி என்னும் பகுதியில் நபர் ஒருவர், தண்ணீர் குழாயில் மூக்கை கழுவிக் கொண்டதாக தெரிகிறது. அப்போது அந்த நபருக்கு நீரின் மூலம் அமீபா தொற்று ஒன்று ஏற்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

மூளையை உண்ணும் அமீபா

அது மட்டுமில்லாமல், நெக்லேரியா ஃபோலேரி என அழைக்கப்படும் மூளையை உண்ணும் அமீபா தாக்கி அந்த நபர் உயிரிழந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், உடனடியாக அப்பகுதி முழுவதும் நிறைய எச்சரிக்கைகளையும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

Florida man passed away by eating amoeba using tape water reportedly

Images are subject to © copyright to their respective owners.

இறந்த நபர் குறித்த விவரத்தை சுகாதாரத்துறை வெளியிடவில்லை என கூறப்படும் நிலையில் அங்கே உள்ள மக்களுக்கு நேரடியாக குழாய்த் தண்ணீரை குடிக்க வேண்டிய வந்தால் அது குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது கொதிக்க வைத்து குடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மூளையை தின்னும் அமீபா காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அச்சத்தை உண்டு பண்ணி உள்ளது.

உலக அளவில் பதற்றம்

முன்னதாக கடந்த ஆண்டு தென் கொரியாவை சேர்ந்த நபர் ஒருவரும் இதே போல  நெக்லேரியா ஃபோலேரி அமீபா தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

Florida man passed away by eating amoeba using tape water reportedly

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இந்த அமீபாவானது, மத்திய நரம்பு மண்டலத்தை பாதிப்பு அடைய வைப்பதுடன் முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிட்டிஸை ஏற்படுத்தி மூளை திசுக்களை சேதப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நோயின் அறிகுறியானது, தண்ணீரில் வெளிப்பட்ட ஒன்று முதல் 12 நாட்களுக்கு பிறகு நோய் அறிகுறிகள் தோன்றிய 18 நாட்களுக்கு இடையே பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கின்றனர். அதே போல கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, கழுத்து விறைப்பு, கோமா உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவை மூக்கின் வழியாக சென்று மூளையை பாதிப்புக்கு உள்ளாக்குவதால் இவை மூளையை உண்ணும் அமீபா என அறியப்படுகிறது.

Also Read | “மோசமானவன்னு சொன்னாங்க.. நான் வாய் தொறக்காம இருந்தது..” மனைவியின் குற்றச்சாட்டு.. மௌனம் கலைத்த நவாஸுதீன் சித்திக்.!

FLORIDA, FLORIDA MAN, EAT, AMOEBA, TAPE WATER

மற்ற செய்திகள்