'நெனைச்சு பாக்க முடியாத அளவுக்கு நடந்த விற்பனை!'... தீபாவளி நேரத்தில் அடிச்சுத் தூக்கிய ஆன்லைன் சேல்! காரணம் இதுதான்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தீபாவளி முடிந்த ஒரு மாதத்தில், அதாவது அக்டோபர் 10-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் மத்தி வரை, ஆன்லைன் சந்தைகளில் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் விற்பனை நடந்துள்ளது.

'நெனைச்சு பாக்க முடியாத அளவுக்கு நடந்த விற்பனை!'... தீபாவளி நேரத்தில் அடிச்சுத் தூக்கிய ஆன்லைன் சேல்! காரணம் இதுதான்!

கணக்கு போடப்பட்டதை விட 20 சதவீதம் அதிகமான விற்பனையை இந்த நிறுவனங்கள் எட்டியுள்ளதாக, ஆன்லைன் சந்தையை கண்காணிக்கக் கூடிய ரெட்ஸீர் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக பெரிய கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கச் செல்வதில் மக்களுக்கு தொய்வு ஏற்பட்டதில், ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், ஒவ்வொரு 10 ஆர்டர்களிலும் 4 ஆர்டர்கள் முதல் முறையாக ஆன்லைன் பயன்படுத்துவோரிடம் இருந்துதான் வந்திருப்பதாகவும், ரெட்ஸீர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தீபாவளி விற்பனை சமயத்தில் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசன் ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து ஆன்லைன் சந்தை விற்பனையில் 88 சதவீதத்தை எட்டியதாகவும் தெர்கிறது.

மற்ற செய்திகள்